லண்டனில் சிறப்பாக நடாத்தப்பட்ட கோடை கால விளையாட்டு விழா !

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால்  பிரித்தானியாவில்; இன்று (06/09/2015) மிகவும் சிறப்பாக தியாக தீபம் லெப்டினன் கேணல் திலீபன் ஞாபகார்த்த கோடை கால விளையாட்டு விழா நடாத்தப்பட்டது. பிரித்தானிய தேசியக்கொடி மற்றும் தமிழீழ தேசியக்கொடி ஏற்றலுடனும் மாவீரர் வணக்கத்துடனும் ஆரம்பமாகிய விளையாட்டுவிழாவில் பெருந்திரளாக விளையாட்டுவீரர்களும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர். Moden Park sports ground , London Road, SM4 5HE. என்னும் இடத்தில் ஆரம்பமாகிய இவ் நிகழ்வில்……… துடுப்பாட்ட போட்டி உதைப்பந்தாட்டப் போட்டி வலைப்பந்தாட்டப் போட்டி சிறுவர் விளையாட்டுப் போட்டி கலாச்சார விளையாட்டுப் போட்டிகள் மாவீரர் பாடல்களிர்க்குரிய நடனப்போட்டி இன்னும் பல விளையாட்டுகள் நடைபெற்றது. அத்துடன் சுவையான தாயக உணவு வகைகளும் மிகவும் சிறப்பாக பாரிமாறப்பட்டது இறுதியில் அதிஸ்டம் பார்க்கப்பட்டு பல பரிசுகளும் வழங்கப்பட்டது அதிஸ்டசாலிகளுக்கன இலக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன . நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் புலம்பெயர் விவகார அமைச்சின் பிரித்தானியாவுக்கான அமைச்சின் செயலர் கௌரவ நீதிராஜவினால் இவ் விழா ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது .  
20150906_112344
 IMG_4215
IMG_0242
 IMG_0235
11986485_459475117558772_3928555011965301400_n
Print Friendly