தமிழினப்படுகொலைக்கு பொறுப்புக்கூற முழங்கிய 16 தீர்மானங்கள்

  • October 1, 2013
  • TGTE

அனைத்துலக வல்லுனர்கள் பங்கெடுப்பில் தமிழினப்படுகொலைக்கு பொறுப்புக்கூற முழங்கிய 16 தீர்மானங்கள் ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

இலங்கைத்தீவில் தமிழினத்தின் மீது நடந்தேறும் இனப்படுகொலைக்குபொறுப்புக்கூற வைக்கும் பொருட்டு பிரித்தானிய மண்ணில் இடம்பெற்றிருந்தமாநாடு பதினாறு தீர்மானங்களுடன் நிறைவுண்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்த இந்தஇரு நாள் (sep 28-29 ) மாநாட்டில் தமிழர், தமிழரல்லாதோர் என பல்வேறுதுறைசார் வள அறிஞர்கள் பங்கெடுத்திருந்தனர்.

இனப்படுகொலைக்கானபொறுப்புக்கூறலை கருத்துருவாக்க ரீதியாக வலியுறுத்துவதானது, பரிகாரநீதியாகசுயநிர்ணய உரிமையினை கோருவதற்கு ஈழத்தமிழனம் உரித்துடையவர்கள் என்றநிலைப்பாட்டினை இந்த மாநாடு பறைசாற்றுகின்றது.

இரு நாள் அமர்விலும்  ஆய்வுரரைகள் பலவும் முன்வைக்கப்பட்டிருந்ததோடுபல்வேறு தலைப்புக்களிலும் விவாதங்கள் இடம்பெற்றிருந்தன. அத்தோடு தமிழர்தாயகத்தினை மையப்படுத்திய புள்ளிவிவரத் தரவுகள் காட்சிப்படுத்தல்களும்இடம்பெற்றிருந்தன.

Geoffrey Robertson QC, Prof Francis Boyle, Prof Sornarajah, Dr David Matas, Emeritus Prof Dr Peter Schalk, Attorney Ali Beydou, Senator Robert Evans and Ron Ridenour  ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தமை இம்மாநாட்டிற்கு வலுவூட்டியிருந்தது.

குறிப்பாக state without nations அமைப்பு  Keri Lehair (Sikh),  News Net Work Oxford Bangladesh,  Kashmir JKLF, Tuareg North Africa, Matavele – Zimbawve, Borneo Nation, Kurdish National Congress பிரதிநிதிகள் பங்கெடுத்து தமிழீழ விடுதலைக்கான தங்களதுதோழமையினைத் தெரிவித்திருந்தமை நம்பிக்கை தருவதாக அமைந்திருந்தது.

இரண்டாம் நாள் அமர்வில் :

சிங்களஇனத்தவரான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினர் Dr. Brian Senewarateneஅவர்கள் காணொளி வழியே பங்கெடுத்து, சிங்களவர்கள் தமிழர்களுக்குஎந்த உரிமையையும் கொடுக்கத் தயாரில்லை எனத் தெரிவித்திருந்ததோடு, இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும் அதனால் தமிழர்கள் தமிழீழத்தைஅமைக்க உரித்துடையவர்கள் என குறித்துரைத்தார்.

இதேவேளை இந்தியாவிலிருந்து நா.தமிழீழ அரசாங்கத்தின் வளஅறிஞர் பிரதிநிதிபேராசிரியர் மணிவண்ணன்அவர்களும் காணொளி வாயிலாக கருத்துரைத்திருந்தார்.

நாடுகடந்ததமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் , தமிழீழத்திலுள்ள தமிழ்ப் பெண்களின் பாதுகாப்பற்ற நிலைமையையும் அங்குஅவர்களுக்கு எதிர்கொள்ளும் பாலியல் அச்சுறுத்தல்கள்குறித்துஎடுத்துரைத்திருந்தர்.அத்துடன் தனது அமைச்சுக்கானஇணையத்தளத்தையும்   wce-tgte.org   அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்இதன் மூலம் உலக ரீதியாக இந்த மகாநாடு நேரலை  செய்யப்பட்டதன் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் இம் மாநாட்டு நிகழ்வுகளை நேரில் பார்க்க முடிந்தமை குறிப்பிடத்தக்கது

அமைச்சர் மகிந்தன்   ஐ.நாவின் Article  99 ஐப் பற்றி விளக்கிக்கூறியிருக்க தமிழர் மனித உரிமை மையம் தலைவர்  கிருபாகரன் அவர்கள்கூறும்போது நாம்   னுந குயஉவழ ளுவயவந   ஈழத்தில் வைத்திருக்கும்போதுதமிழீழம் பிரகடனப்படுத்த தவறிவிட்டோம் என்று மனம்வருந்தினார். அத்துடன்  article  99  பற்றி விரிவாக விளக்கம் கொடுத்தார்.

தமிழர் தாயகத்தில் இடம்பெறும் நில அபகரிப்பு தொடர்பில் ஆதாரபூர்வதரவுசார் விபரணத்தினை பிரித்தானியத் தமிழர் பேரவையின் பிரதிநிதிரவிக்குமார் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

தமிழ் இளையோர் சமூகம்வரலாற்றுச்சான்றுகள் மற்றும் தரவுகள் மூலம் இலங்கைத்தீவில் தமிழர்கள் ஒர்மரபுரீதியிலான தேசிய இனம் என்பதனை காட்சிகளாக வெளிப்படுத்தியிருந்தனர்.

மாநாட்டு தீர்மானத்தினைத் தொடர்ந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் நிமலன்,
மணிவண்ணன், சுரேன், இராஜேந்திரா, அமைச்சர் பாலாம்பிகை, பரமானந்தம், மாணிக்கவாசகர், யோகிஆகியோர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடந்து வந்த பாதை தொடர்பிலும், இரண்டாம் அரசவைக்கான தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் பங்கெடுக்க வேண்டியகடப்பாடு குறித்தும் உரையாற்றியிருந்தனர்.
                                                wce-tgte.org   

 

More from our blog

See all posts