அவுஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சந்திப்பு !

  • September 1, 2014
  • HRC
tgteஅவுஸ்றேலியாவின் வெளிவிவகார அமைச்சக மூத்த அதிகாரிகளுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

 

கன்பராவில் அமைந்துள்ள பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றிருந்த இந்தச் சந்திப்பில், இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் எதிர்கொண்டு வருகின்ற சவால்கள், இனப்பிரச்சனைக்கான தீர்வு ,இனப்படுகொலை தொடர்பிலான விசாரணை மற்றும் அகதிகள் விவகாரம் என பல்வேறு விடயங்கள் கருத்துப்பரிமாறப்பட்டுள்ளன.

 

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் க.மாணிக்கவாசகர், புலம்பெயர் சமூக விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர்  க.சிறிசுதர்சன், பாராளுமன்ற உறுப்பினர்களான சு.ஸ்கந்தகுமார், மருத்துவர் அபிராமி விசுவநாதன் ஆகியோர்  பங்கெடுத்திருந்தினர்

 

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோற்றம் அதன் செயற்பாடு நோக்கம் குறித்து இச்சந்திப்பில் எடுத்துரைந்த தமிழர் பிரதிநிதிகள், சிறிலங்கா அரசாங்கத்தினால் தமிழ் மக்கள் படிப்படியாக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு இன்னல்படுவதையும், தமிழ்மக்களுக்கு எதிராக இனப்படுகொலை குறித்தும் தெளிவாக முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது நடக்கின்றது பற்றி தங்களுக்குத் தெரியும் எனத் அவுஸ்றேலிய அரச அதிகாரிகள் தங்களிடம்  தெரிவித்திருந்ததாக கூறியுள்ள பிரதி அமைச்சர்  க.சிறிசுதர்சன் அவர்கள், தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வினை ஏற்படுத்துவதற்கு அவுஸ்றேலியா சிறிலங்கா அரசாங்கத்துக்கு தொடர்சியாக அழுத்தங்களை கொடுத்துவருவதாக தெரிவித்திருந்ததாகவும் கூறியுள்ளார்,

 

அவுஸ்திரேலிய அரசாங்கம் தமிழ் மக்களின் விவகாரத்தில் முக்கிய பங்கு எடுத்து, சர்வதேச சமூகத்திற்கு ஆதரவு அளிப்பதன் மூலமும் தமிழ் மக்களின் பிரச்சனைகளின் அடிப்படை காரணத்தை கண்டு பிடிப்பதன் மூலமும்  அவர்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் எனவும் இசந்திப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

More from our blog

See all posts