இன்னும் இருப்பது 20 நாட்களே! ஐ.நா விசாரணைக்கான சாட்சியங்கள் திரட்டும் பணி கனடாவில் தீவிரம்!

  • October 12, 2014
  • TGTE
canada-poster1புலம்பெயர் தமிழர்கள் செறிந்த வாழும் நாடுகளில் முதன்மையான கனடாவில் சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா விசாரணைக்கான சாட்சியங்களைத் திரட்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல்முனைப்பில் இதற்கான பணிகளை இனஅழிப்புத் தடுப்பும், விசாரணை முயற்சிகளுக்கான மையம் (ICPPG) இது தொடர்பிலான விழிப்பூட்டல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

கனடாவினைச் சேர்ந்த பன்முகத்தளங்களில் பங்காற்றுகின்ற பிரமுகர்கள் பலரும் இதற்கான பிரச்சார பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

சாட்சியங்களின் இரகசியத்தன்மை உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அச்சமின்றி அனைவரும் சாட்சியம் வழங்கலாம் என கனேடிய ஒருங்கிணைப்பாளர் ஜோ அன்ரனி தெரிவித்துள்ளதோடு, ஒக்ரோபர் 30ம் திகதிக்கு முன்னராக சாட்சியங்களை வழங்கவேண்டியுள்ள நிலையில், தாமதமின்றி அனைவரும் பங்கெடுக்க முன்வரவேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறித்த Scarborough, 1231 Ellesemers Road இந்த முகவரியில் சாட்சியங்களை வழங்கவோ அல்லது மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ளவோ முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, 416 751 8483இந்த தொடர்பிலக்கம் மூலம் தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

21 பெப்வரி 2002ம் ஆண்டில் இருந்து 15 நொவெம்பர் 2011ம் ஆண்டுக்குள் பாதிப்புக்குள்ளானவர்களும், இந்த காலப்பகுதியோடு ஒட்டிய சம்பவங்களோடு தொடர்புடைய முந்திய அல்லது பிந்திய காலச்சம்பவங்களையும் ஐ.நா விசாரணைக்கு சாட்சியங்களாக வழங்கமுடியும்.

தமிழின அழிப்பில் ஈடுபட்டவர்களை பொறுப்புக் கூற வைப்பதோடு, தமிழர்களுக்கான பரிகார நீதியினை அனைத்துலக சட்ட வழிமுறைகள் ஊடாக கோருவதற்கு எட்டியுள்ள வாய்ப்பாக ஐ.நா விசாரணையினை ஈழத் தமிழர்கள் கருதுகின்றனர்.

More from our blog

See all posts