தமிழ் பெண்கள் சிறுவர்கள் முதியோர் நலன்பேணல் மையத்தின் தலைவி ரஜனி செல்லத்துரை அவர்களது ஒருங்கிணைப்பில் ‘OCAPROCE INTERNATIOAL அமைப்பின் ஊடாக இந்த உபமாநாடு (25-03-2015) புதன்கிழமையன்று இடம்பெற்றது.
காணொளி விபரணம், கருத்துரை, கேள்விபதில் வடிவில் இடம்பெற்றிருந்த இந்த உபமாநாட்டில், தமிழகத்தில் இருந்து பேராசிரியர் இராமு.மணிவண்ணன், உயர் நீதிமன்ற சட்டத்தரணி திருமதி.அங்கயக்கன்னி, செல்வி உமாசங்கரி நெடுமாறன் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.
இம்மகாநாடு OCAPROCE INTERNATIOALமைப்பின் தலைவி தலைமையில் இடம்பெற்றிருந்த உபமாநாட்டில், திருமதி ரஜனி செல்லத்துரை தொடக்கவுரையினை வழங்கியிருந்தார்.
இலங்கையினை மையப்படுத்தி ஐ.நா மனித உரிமைச்சபையில் இடம்பெற்றிருந்த உபமாநாடுகளில் குறிந்த இந்த உபமாநாடு மிகமுக்கியத்துவம் உள்ளதென பேராசிரியர் இராமு.மணிவண்ணன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
இதேவேளை இவ்வாறான உபமாநாடுகள் தமிழர் தரப்பினால் தொடர்சியாக ஐ.நா மனித உரிமைச்சபையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பிரதிநிதி சி.கிருபாகரன் தெரிவித்திருந்தார்.
தமிழீழத் தாயகத்தில் இருந்து வருகை தந்திருந்த அரசியல் பிரமுகர்கள் வெளிநாட்டு மனித உரிமை அமைப்பு பிரதிநிதிநிகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு தமிழர் அமைப்பு பிரதிநிதிகளும் இந்த உபமாநாட்டில் பங்கெடுத்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.


TGTE_HRCTGTE_HRC1TGTE_HRC2TGTE_HRC3TGTE_HRC4TGTE_HRC7TGTE_HRC6

TGTE_HRC5