லண்டனில் 21 தியாகிகள் நினைவுத் தூபி அமைவிடத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு!

  • December 1, 2014
  • HDA

2014-11-27 12.32.15

இந்த நிகழ்வு  காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெற்ற இந்த மாவீரர் நாள் நிகழ்வில் பெருமளவான மக்களும், பல போராளிகளும் வந்து கலந்துகொண்டிருந்தனர்.

குறிப்பாக வேலை, மற்றும் பாடசாலை நாளான இன்று உள்லமையால் காலை 8:00 மணி முதலே மக்கள் அங்கு சென்று தமது வணக்கத்தைச் செலுத்தி சென்றமை குறிப்பிடத்தக்கது.

சரியாக மதியம் 12:05 ற்கு பொதுச்சுடரினை ஈகைப்பேரொளி முருகதாசனின் பெற்றோரால் ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இதுவரை காலமும் தாயக விடுதலப் போரில் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்காகவும், மாமனிதர்கள் மற்றும் நாட்டுப்பற்றாளர்களுக்காகவும், தமிழர்களைன் விடுதலைக்காக தங்களையே தீயிற்கு ஆகுதியாக்கிய தியாகிகளுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து மாவீரர் துயிலும் இல்ல பாடல் இசைக்க அனைவரும் தங்கள் கைகளிலே வைத்திருந்த நீபங்களை ஏற்றி மாவீரர்களை நினைந்து உருகி அழுத வண்ணம் நின்றமையை காணமுடிந்தது.

அதைத் தொடர்ந்து ஈகைப்பேரொளி முருகதாசன் உட்பட்ட 21 தியாகிகள் நினைவுத் தூபிக்கு மலர் மாலையினை இன்பன் மற்றும் நிமலன் ஆகியோர்  அணிவித்தார்கள்.  ஈகைச் சுடரினை திருமதி. கமலாதேவி ஸ்கந்ததேவா மற்றும் திருமதி. பாலாம்பிகை முருகதாஸ் ஆகியோர் ஏற்றிவைத்தனர்.

தொடர்ந்து மக்கள் அனைவரும் வரிசைக்கிரமமாக சென்று ஒளி தீபம் ஏற்றி மலர் கொண்டு மாவேரர்களை வணங்கிச் சென்றனர். தொடர்ந்து மாவீரர் நினைவு உரைகளை போராளிகளான இன்பன் மற்றும் தும்பன் ஆகியோர் வழங்க  இறுதியாக உறுதி ஏற்போடு நிகழ்வுகள் நிறைவு பெற்றது.

2014-11-27 12.32.15

2014-11-27 12.26.00

More from our blog

See all posts