உயிரிழந்த மலையக உறவுகளுக்கு நா.க.த.அ.அரசவையில் மரியாதை வணக்கம் செலுத்தப்பட்டது!

  • November 5, 2014
  • TGTE
77நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாதாந்த அரசவைக் கூட்டத்தில், நிலச்சரிவில் உயிரிழந்த மலையக தமிழ் உறவுகளுக்கு, மரியாதை வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப பரிவர்த்தனையூடாக இடம்பெறும் இவ்மாதாந்த அரசவைக் கூட்டத்தில், அவைத்தலைவர் தவேந்திரராஜா அவர்கள், மரியாதை வணகத்தினை அவையில் முன்வைத்திருந்தார்.

மரியாதை வணக்கத்தில் தெரிவிக்கப்பட்டதாவது,

பெரும் இயற்கை அனர்த்த்தினால் இலங்கைத்தீவின் பதுளை மாவட்டத்தின் கொஸ்லாந்தை பகுதியில் அமைந்துள்ள மீரியபத்த தோட்டக் கிராமத்தில் இடம் பெற்ற பாரிய நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த எமது சகோதர உறவுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை தனது இரங்கலையும் மரியாதை வணக்கத்தினையும் செலுத்துகின்றது.

பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களது கரங்களையும் இந்த அரசவை இறுகப்பற்றிக் கொள்கின்றது.

நெருக்கடிமிகுந்த சமூக அரசியல் சூழலுக்கு முகம் கொடுத்து நீண்டகாலமாக வாழ்ந்து வரும் மலையகத் தமிழ் மக்கள் சந்தித்துள்ள இந்த இயற்கைக் பெருஅழிவு அம்மக்களது வாழ்வியல் மேம்பாட்டின் அவசியத்தினை உணர்த்தி நிற்கின்றது.

புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியில் இயங்கும் தொண்டு நிறுவனங்கள், தமிழ்ச் சமூக அமைப்புக்கள், மற்றும் வழிபாட்டு தளங்கள் போன்றவற்றன பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வுப் பணிகட்கு பூரண ஆதரவினை வழங்குமாறு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வேண்டுதலையும் இந்த வேளையில் இந்த அரசவை நினைவுபடுத்திக் கொள்கின்றது எனத் மரியாதை வணக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உதவிகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உரிய அமைச்சுக்கள் மற்றும் பிரதிநிதிகள் செய்வதற்குரிய ஏதுநிலைகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டிருந்தது.

More from our blog

See all posts