கனடாவில் நா.க.த.அ.செயற்பாடுகள் விரிவாக்கம் : சாட்சியம் திரட்டுதல் பொங்குதமிழ் ஏற்பாடுகள் தீவிரம் !

  • September 23, 2014
  • TGTE

"                               "நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது செயற்பாடுகளை கனடாவில் விரிவாக்கும் பொருட்டு, ரொறன்ரோவில் அலுவலகம் ஒன்றினைத் திறந்துள்ளதோடு, ஐ.நா விசாரணைக்கு சாட்சியங்களை திரட்டுதல் மற்றும் பொங்குதமிழ் நிகழ்வுக்கான ஒழுங்குகளை தீவிரப்படுத்தியுள்ளது.

Scarborough, 1231 Ellesemers Road எனும் முகவரியில் திறக்கப்பட்டுள்ள அலுவலகமானது, கனடாவுக்கான அரச பணிகளுக்கான செயல்மையமாக விளங்கஇருப்பதோடு, பொதுமக்களுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசுக்குமான உறவினை வளர்தெடுக்க பெருதும் உதவும் என அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐ.நா விசாரணைக்கான சாட்சியங்களை ஆதாரங்களை இந்த அலுவலகத்தில் வழங்கவும் தெரிவிகப்பட்டுள்ளதோடு, விசாரணை தொடர்பில் மேலதிக விபரங்களையும் பெற்றுக்கொள்ளலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ponraja flyer- UN commisson-page-001Ponraja flyer- UN commisson-page-002

மேலும் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஐபக்சவின் அமெரிக்க வருகையினை மையமாக கொண்டு , செப்24ம் நாள் நியூ யோர்க் ஐ.நாபொதுச்சபையின் ஏற்பாடாகியுள்ள பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வில் பங்கெடுப்பதற்கான பயணபதிவுகளையும், இந்த அலுலகத்தில் மேற்கொள்ளமுடியும் எனவும் தெரிவிகப்பட்டுள்ளது.

செப்ரெம்பர் 13ம் நாள் இடம்பெற்றிருந்த அலுவலக திறப்புவிழா நிகழ்வில் தொழில் அதிபர் திரு. சொர்ணலிங்கம், தமிழ் உணர்வாளரும் எழுத்தாளருமான ‘நக்கீரன் ‘ திரு. தங்கவேல், ,திரு. சிவதாசன், திரு. வி. எஸ். துரைராஜா, தொழில் அதிபர் திரு. ராஜன், திருமதி. சாந்தினி சிவராம் ஆகியோர் மங்கள விளக்கினை ஏற்றி திறப்பு விழாவினை ஆரம்பித்து வைத்தனர். அக வணக்கத்தினைத் தொடர்ந்து திரு.வின். மகாலிங்கம் அவர்கள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

விழாவில் கலந்து கொண்ட மார்க்கம் நகர சபை உறுப்பினர் திரு. லோகன் கணபதி ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சமீபகாலமாக பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் இந்த அரசானது மனச்சாட்சியுடனும் ,நீதி, நேர்மையுடனும் செயல்பட்டு வருவதாகவும் இப்பணி மேன்மேலும் சிறப்புற இந்த அலுவலகம் அமைக்கப்பட்டு இருப்பதை வரவேற்பதாகவும் பாராட்டினார்.

இந்த நிகழ்வில் திரு . தங்கவேல்,கனடிய தமிழர் பேரவை திரு. டேவிட் பூபாலபிள்ளை, பேராசிரியர் சந்திரகாந்தன், திரு, ஈழவேந்தன், கல்விச் சபை உறுப்பினர் ஜுநிட்டா நாதன், செல்வி. ப்ரியா ஆகிய பலரும் உரை நிகழ்த்தினார்கள். ஒண்டாரியோவின் பல்வேறு மட்டத்திலும் உள்ள உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் பலரும் கலந்து கொண்டு தம்மை அறிமுகப்படுத்தினார்கள்.

இந்த திறப்பு விழாவில் பெருந்திரளான நாடுகடந்த தமிழீழ அரசின் ஆதரவாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பெரும் அளவில் கலந்து கொண்டமை குறிப்பிடத் தக்கதாகும்.

 

More from our blog

See all posts