கனடாவில் பேராசிரியர் ராமு மணிவண்ணனின் “SriLanka Hiding The Elephant” நூல் அறிமுகவிழா

  • December 13, 2014
  • TGTE

timthumbசென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் பொது நிர்வாகத் துறையின் பேராசிரியரும் தலைவருமான ராமு மணிவண்ணன், ஈழத் தமிழர் படுகொலைக்கான ஆதாரங்களை ‘SRI LANKA: HIDING THE ELEPHANT’ என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளார்.

குறித்த நூலின் அறிமுகவிழா 13.12.2014 சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் கனடாவின் ரொறன்ரோவில் 7600 Kennedy Road, Markham, ON L3R 9S5 என்கிற முகவரியில் உள்ள Milliken Mills Community Centre இல் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு சென்னையில் இருந்து வருகை தந்த நூலாசிரியர் பேராசிரியர் ராமு மணிவண்ணன் நேரடியாகப் பங்கேற்கிறார்.

ஈழத்தமிழர் ஆதரவாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியலாளர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் அனைவரையும் பங்கேற்குமாறு அழைக்கின்றார்கள் ஏற்பாட்டாளர்கள்.

இந்நூல் வெளியீட்டு விழாவினை கனடியத் தமிழ்ப் படைப்பாளிகள் கழகமும், நாடு கடந்த தமிழீழ அரசும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த மூன்று வருடங்களாக இலங்கை தொடர்பான ஐ.நா. அமர்வுக்குச் சென்று வரும் ராமு மணிவண்ணன் இலங்கைத் தமிழர் பிரச்சினையை உன்னிப்பாக அவதானித்து வருகின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நூல் வெளியீட்டு விழா தொடர்பிலான மேலதிக விபரங்களுக்கு,416 648-3373 & 416 281-1165 

  ramu-manivannan
 ramu manivannan1

More from our blog

See all posts