காணாமல் போனோருக்கான அனைத்துலக நாள் : பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன் கவனயீர்ப்பு போராட்டம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

  • August 29, 2015
  • TGTE

ஐ.நாவின் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள காணாமல் போனோருக்கான அனைத்துலக நாளான ஓகஸ்ற் 30ம் நாளன்று இலங்கைத் தீவில் காணாமல் போன தமிழ் உறவுகளுக்கான நீதிகோரு கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெறவுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன் இக்கவனயீர்ப்பு போராடம்

On Sunday  30th Aug 2015.

10 Downing Street,

London,

SW1A 2AA.
Nearest underground: Westminster

மதியம் 2 மணி முதல் 5 மணி வரை இடம்பெறுகின்றது.

உலக அளவில் இந்நாளையொட்டி பல்வேறு நிகழ்வுகள் பல்வேறு அனைத்துலக அமைப்புகளினாலும் முன்னெடுக்கப்படுகின்றன.

இலங்கைத்தீவின் தமிழர் தாயகப்பகுதிகளிலும் காணாமல் போனவர்களைத் தேடும் உறவுகளினது பல்வேறு கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

இதேவேளை காணால் போனவர்கள் தொடர்பிலான சிறிலங்கா ஜனாதிபதி விசாரணைக்குழுவின் அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது சமர்ப்பிக்கப்படாது சிறிலங்கா தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

http://www.un.org/en/events/disappearancesday/

30Aug_uk

More from our blog

See all posts