சிறிலங்கா அதிபர் தேர்தலில் வாக்களிக்க புலம்பெயர் தமிழர்கள் கோரவில்லை-அமைச்சர் சுதன்ராஜ்  

  • December 14, 2014
  • TGTE

சிறிலங்கா அதிபர் தேர்தலில் வாக்களிக்க புலம்பெயர் தமிழர்கள் கோரவில்லை : பொதுசன வாக்கெடுப்பினையே கோருகின்றனர் – அமைச்சர் சுதன்ராஜ் !

2014-12-06 19.11.47சிறிலங்காவின் அரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிக்க புலம்பெயர் தமிழர்கள் வாய்ப்புக் கோரவில்லை. மாறாக தமிழீழம் மக்கள் தங்களின் அரசியல் விருப்பினை வெளிப்படுத்துவதற்கான பொதுசன வாக்கெடுப்பினையே அனைத்துலகத்திடம் கோருகின்றனர் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலில் புலம்பெயர் தமிழர்கள் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரியதாகவும் அதனை தாங்கள முற்றாக மறுப்பதாகவும் சிறிலங்காவின் அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்கள் வெளியிட்ட கருத்துக்கு பதில் அளிக்கும் பொழுதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் சுதன்ராஜ் மேற்படி கூற்றினைத் தெரிவித்துள்ளார்.
தமிழீழத் தாயக மக்கள் மற்றும் தமிழீழத்தினை பூர்வீகமாக கொண்ட புலம்பெயர் மக்கள் பங்குகொள்ளும் பொதுசன வாக்கெடுப்புக்கான  கோரிக்கையினை அனைத்துலகத்திடம் நாம் முன்வைத்துள்ளதோடு இதனை நடந்து முடிந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்விலும் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளோhம் எனவும் அமைச்சர் சுதன்ராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் புலிப்பயங்காட்டி வாக்குசேகரித்த சிங்கள அரசியல்வாதிகளின் தற்போது டயஸ்பொறாவை (புலம்பெயர் தமிழர்) பயங்காட்டி வாக்கு வேட்டையில் ஈடுபடுகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாதம் ஊடகசேவை
சிறிலங்காவின் அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்கள் வெளியிட்ட கருத்து  : http://www.emurasu.com/news/story/533/srilanka-news

More from our blog

See all posts