தமிழீழக் கொடி பட்டொளி வீச அமெரிக்காவில் இடம்பெற்ற விளையாட்டு போட்டி

sports_america_006தமிழீழத் தேசியக் கொடி பட்டொளி வீச அமெரிக்காவில் விளையாட்டு போட்டியினை நடாத்தியிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், பிரான்ஸ் தமிழர் விளையாட்டு விழாவுக்கு தனது தோழமையினைத் தெரிவித்துள்ளது.

நியூ யோர்க் நகரில் இடம்பெற்றிருந்த இந்த விளையாட்டு போட்டியில் நியூஜெர்சி, நியூயோர்க், மாசசூட்ன் மாநிலங்களில் இருந்து பொதுமக்களும் போட்டியாளர்களும் பங்கெடுத்திருந்தனர்.

இது வெறும் உடையல்ல உணர்வு என்ற சொற்தொடர் பதியப்பட்ட ஈழ வரைப்படத்தினைக் கொண்ட மஞ்சள் நிற ரீசேட்டில் விளையாட்டு வீரர்கள் களங்கண்டிருந்தனர்.

அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் மதிப்புக்குரிய ரம்சி கிளாக் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்திருந்தார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பொதுமக்களின் உற்சாககளிப்பில் தன்னையும் இணைத்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார்.

உலகின் தொன்மைமிக்க மொழிகளில் தமிழ்மொழியுன் ஒன்றென தனதுரையில் கருத்து தெரிவித்திருந்த திரு.ரம்சி கிளாக் அவர்கள், தமிழனம் செழுமைமிக்கதொரு தனித்துவமாக கலாசாரத்தினை கொண்டதெனவும் தெரிவித்தார்.

அண்மைக் காலங்களில் மிகவும் பாதிக்கப்பட்ட இனங்களில் முக்கியமான ஒன்றாக தமிழினம் இருக்கின்றது என தெரிவித்த அவர், ஈழத்தமிழினம் தன்னுடைய உரிமைகளை வென்றெடுக்க இன்னும் பலமைல்கள் கடக்க வேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

ஈழவிடுதலைப் போராட்டத்துடன் கடந்த 20 ஆண்டுகளாக தன்னை இணைத்துக் கொண்டுள்ள திரு.ரம்சி கிளாக் அவர்களது பங்களிப்புக்குறித்து பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் எடுத்துரைத்திருந்தார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனேடிய பிரதிநிதிகள் பலரும் இந்த விளையாட்டுப் போட்டியினை ஊக்கப்படுத்த வருகை தந்திருந்தனர்.

இதேவேளை, தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் மையத்தினால் 17வது தடவையாக நடாத்தப்பட்டிருந்த தமிழர் விளையாட்டு விழாவுக்கு தங்களது தோழமையினை தெரிவித்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மைதானத்தில் மக்கள் தொடர்பாடல் மையமொன்றினை நிறுவியிருந்தது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை விளக்கும் பிரதிகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்ததோடு, அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலான விடயங்களை பொதுமக்களுக்கு நேரடியாகவும் விளக்கியிருந்தனர்.

 

More from our blog

See all posts