புங்குடுதீவு மாணவி படுகொலை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையான கண்டனம்

  • May 15, 2015
  • WCE

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைச் சேர்ந்த மாணவியின் படுகொலை குறித்துஇ நாடு கடந்த தமிழீழ அரசா ங்கம் பெண்கள் சிறுவர் முதியோர் மையம் அவர்கள் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த கவலையினை தெரிவித்துக் கொள்ளும் அதே நேரம் இந்த பாதகச் செயலினை புரிந்தவர்களுக்கு அனைத்து தமிழ் மக்கள் பெண்கள் மற்றும் தாய்மார்கள் சார்பில் வன்மையான கண்டனத்தினை பதிவு செய்கிறது.

2009ம் ஆண்டு மௌனிக்கப்பட்டது தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டம் மட்டுமல்ல அதுவரை தமிழீழப் பெண்களுக்கு உறுதி செய்யப்பட்டிருந்த சமூகப் பாதுகாப்பும் தான் .

முற்று முழுதான இராணுவ ஆக்கிரமிப்பு சூழலில் வாழும் எமது மக்கள்இ சிங்கள இராணுவத்தினர் மற்றும் அவர்களோடு சேர்ந்தியங்கும் அரச சார்புடையவர்களால் சமூக வாழ்வியல் பாதுகாப்பின்மை மற்றும் கடும் உயிர் அச்சுறுத்தல் என்பனவற்றை நாளாந்தம் எதிர்நோக்கி வருகிறார்கள்.

கடந்த காலங்களில் குறிப்பாக 2009 மே மாதம் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை பேரழிவின் தொடர்ச்சியாக இம்மக்கள் இராணுவம் உட்பட்ட பல தரப்பினரதும் கொடிய பாதகச் செயல்களுக்கு உட்பட்டும் அனுபவித்தும் வருகிறார்கள் என்பதனை நாம் அனைவரும் அறிவோம் .

இன அழிப்பு என்பது வெறுமனே உயிர்களை மட்டும் கொல்வது அல்ல என்பதும் அது ஒரு மனிதனின் அமைதியான இருப்பிற்கான அதன் வளர் ச்சிக்கான அத்தனை காரணிகளையும் அழித்தல் ஆகும். மற்றும் அந்த இனம் அதன் சந்ததிகள் மீண்டும் தோன்றாது இருப்பதற்கான இஅத்தனை சமூக கட்டமைப்புக்கள்அதன் மூலங்கள் எல்லாவற்றையும் படி ப்படியாக திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு நிர்மூலமாக்கி அழித்து விடுதல் ஆகும்.

பொதுமக்கள் வாழ்க்கையில் மற்றும் சமூகங்களில் இவ்வாறான மனச் சிதைவினை ஏற்படுத்தக் கூடிய கொடுமையான விடயங்களை செய்வதன் மூலமும் துணைக் கருவிகளை அவ்வாறான செயல்களை செய்வதற்கு தூண்டுவதும் செய்வதற்கான பாதுகாப்பான சூழ்நிலைகளை தோற்றுவித்துக் கொடுத்தலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாது பாதுகாப்பாக தப்பிப்பதற்கு வழி செய்தலும் ஒரு இனத்தை தொடர்ச்சியாக அழிப்பதற்கான வழிகள் என்பதனை நாம் இங்கு உரத்துச் சொல்ல விரும்புகிறோம் .

இன்று நாம் அத்தகைய கொடுமைகளை அனுபவிக்கும் அதே நேரம் மெல்ல மெல்ல அழிந்து கொண்டும் இருக்கிறோம்.

சர்வ தேசத்தின் கண்களுக்கு புலப்படாத ஆனால் தமிழ் மக்கள் மட்டுமே அனுபவிக்கக் கூடிய இந்த விடயத்தை நாம் உடனடியாக ஒன்று சேர்ந்து சீர்ப்படுத்தாது விட்டால் எதிர்காலத்தில் ஒரு அரசியல் வலுவுள்ள மக்கள் சக்தியாக இல்லாது இலங்கை பேரினவாத அரசியல் சக்திகள் எதிர்பார்க்கும் அடிமைச் சக்தியாக மாறும் அபாயம் விரைவில் வந்து விடும்.

TGTE_HRC5பெண்கள் இராணுவக் கண்காணிப்புக்கள் மத்தியிலும் பலத்த அச்சுறுத்தல்கள் மத்தியிலும் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் அவர்களுக்கு சமூகத்தில் பாதுகாப்பின்மையை கூறி வந்திருக்கிறார்கள். ஆனால் பொறுப்பு கூறக் கூடியவர்கள் மத்தியில் அவர்களின் கோரிக்கைகள் பெரியளவில் செயற்பாட்டினை கொண்டிருக்கவில்லை என்பது வருந்த தக்கது.

எனவே எமது சமூகத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பினை அனைவரும் உணர்ந்து விரைந்து உகந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது இன்றைய காலகட்டத்தில் மிக இன்றியமையாத ஒன்று.
உரிய செயற்பாடுகளை முன்னின்று எடுப்பதும் அதற்காக குரல் கொடுப்பதும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களினது கடமையாகும்.

இன்று துயர் நிறைந்த இந்த சம்பவத்திற்கு உரிய நீதி மற்றும் விசாரணை கோரி பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சமூக ஆர்வலர்களும் முன்வந்தமை நல்லதோர் சமூக ஆரோக்கியத்திற்கு வழிகாட்டியாக உள்ளது .

ஆக்கிரமிப்பாளர்களின் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலினில் குறி வைக்கப்பட்டிருக்கும் எமது சமூகத்தை அரசியலாளர்கள்இசமூக ஆர்வலர்கள்இ பாடசாலைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சிறுவர் பெணகள் முதியோர் நலன்பேண் மையத்தின் தலைவி ரஜனிதேவி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

More from our blog

See all posts