லண்டனில் உணர்வுபூர்வமாக தொடங்கிய தமிழீழத் தேசிய துக்க நாள் நினைவேந்தல் வாரம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை மையப்படுத்தியதான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் மே12ம் செவ்வாய்கிழமை உணர்வுபூர்வமாக புலம்பெயர் தேசங்களில் தொடங்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரச ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ள தமிழீழத் தாயகத்திலும், இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நினைவேந்தல் வாரம் உணர்வுபூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புலம்பெயர் தேசங்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பில் நினைவேந்தல் வாரம் உணர்வுபூர்வமாக தொடங்கப்பட்டுள்ளதன் ஒரு அங்கமாக பிரித்தானியாவில் உணர்வுபூர்வமாக தொடங்கப்பட்டுள்ளதாக நா.தமிழீழ அரசாங்கத்தின் பொதுசன விவகாரங்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

லண்டனில் அமைந்துள்ள நா.தமிழீழ அரசாங்கத்தின் பணிமனையில் சிறப்பான முறையில் நினைவேந்தல் வாரத்துக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டு நினைவேந்தல் வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

நிகழ்வு :

ஈகைச்சுடரினை நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதியும் மாவீரர் குடும்பமாகிய திரு.குமார் அவர் ஏற்றி வைக்க நினைவேந்தல் முதன்மைச்சுடரினை அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் ஏற்றிவைத்திருந்தார்.

நினைவேந்தல உரையினை பொதுசன விவகாரங்கள் அமைச்சின் பிரித்தானியச் செயலர் ருத்ராபதி சேகர் அவர்கள் வழங்கி நிகழ்வினை தொகுத்திருந்தார்.

தொடர்ந்து அமைச்சர் பாலாம்பிகை, நீதிராஜ், நிமலன், யோகி, முருகதாஸ், குமார்,ஆறுமுகம் ஆகிய பிரதிநிதிகள் நினைவேந்தல் கருத்துரையினை வழங்கியிருந்தனர்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நேரடிச் சாட்சியமாக விளங்கும் இலங்கேஸ்வரன் மற்றும் விதுசன் ஆகியோர் அனுபவங்களை பதிவு செய்திருந்தனர். நினைவேந்தல் கவிதையினை தயீசன் வழங்கியிருந்தார்.

  
 
Fotor051305849
Transnational Government of Tamil Eelam

More from our blog

See all posts