2011-08-01 பெண்கள், சிறுவர், முதியோரினது பாதுகாப்பு

 Wednesday, 1 June 2011 at 07:44

பெண்கள், சிறுவர், முதியோரினது பாதுகாப்பு எமதுதலையாய பொறுப்பாக அமைகிறது!: நாடுகடந்த தமிழீழம்

காலங்காலமாக சிறீலங்கா பேரினவாதஅரசாங்கமும் அதன் முப்படைகளும் தமிழ் மக்கள்மீது மேற்கொண்டுவந்துள்ள இனவழிப்பு முயற்சிகளை மிகக்கொடூரமாகச் சந்தித்து வந்தவர்கள் நமது பெண்கள்,சிறுவர், முதியோர் ஆகியோரே.

இது தொடர்பாக நாடுகடந்த தமிழீழ சிறுவர், முதியோர் விவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஊடக அறிக்கை

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் விவகாரங்களுக்கான, அமைச்சின் சார்பில் இவ் அறிக்கை ஊடாகக் கருத்துக்களை மக்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாம் மகிழ்வடைகிறோம்.

காலங்காலமாக சிறீலங்கா பேரினவாத அரசாங்கமும் அதன் முப்படைகளும் தமிழ் மக்கள் மீது மேற்கொண்டு வந்துள்ள இனவழிப்பு முயற்சிகளை மிகக்கொடூரமாகச் சந்தித்து வந்தவர்கள் நமது பெண்கள்,சிறுவர், முதியோர் ஆகியோரே.

சிறீலங்கா படைகள் சென்ற ஆண்டு நடத்திய யுத்தத்தின்போது அப்பாவிப் பொதுமக்களைக் குறிவைத்து மேற்கொண்ட குண்டுவீச்சுக்கள், கொலைகளின் போதுகூடுதலாகப் பாதிப்புக்குள்ளானவர்களும் இவர்களே.

எல்லாச் சமூகங்களையும் போல் எமது சமூகத்தினிடையேயும் பெண்களும் சிறுவர், முதியோரும் பல்வேறு துன்பங்களைத் தாங்கிக்கொண்டு அவற்றினிடையே நலிவின் விளிம்பில் வாழ்க்கையை நடத்திவந்துள்ளார்கள். நடாத்தி வருகிறார்கள். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வேதனைகளை உலகிற்கு எடுத்துக்கூறி நீதியும் நிவாரணமும் பெற்றுக்கொள்ளும் பெரும்பணி எமது அமைச்சின் கடமையாயுள்ளது.

அண்மைக்காலமாக ஊடகங்களின் ஊடாக எங்கள் தாயகத்து உறவுகளின் மேல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பயங்கரக் கொடுமைகள், சித்திரவதைகள், படுகொலைகள் பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இரத்தத்தை உறையவைக்கும் இக்காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் அறிக்கைகளெல்லாம் கொடூரமான கதையொன்றின் சிறுபகுதி மட்டுமே.

இளம்பெண்கள் எத்தனையோ பேர் இதே அரசின் பிடியில் சிக்குண்டு பாலியல் துன்புறுத்தலுக்கு தினமும் உள்ளாகின்றனர். ஊடகவியலாளராகப் பணியாற்றிய இசைப்பிரியா, உசாலினி மற்றும் பலரது கொடூரம் மிக்க அனுபவங்கள் சிங்கள அரசாங்கத்தின் கைகளில் எமது பெண்கள் வயது வேறுபாடின்றிக் கொடுமைக்குள்ளாவதைத் தெளிவாக்குகின்றது.

எமது அமைச்சானது எம் தாயகமண்ணில் பெண்கள் சிறுவர் முதியோர்களுக்கெதிராக சிறிலங்கா அரசால் இழைக்கப்பட்ட, இழைக்கப்படும் பெரும் கொடுமைகளை உலகளாவிய ரீதியில் இயங்கும் பெண்கள் நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகளின் கவனத்துக்கு ஆவணங்கள் அறிக்கை மூலமாகவும் நேரடித் தொடர்புகள் ஊடாகவும் கொண்டு வந்து அவர்களின் கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது.

பிரித்தானியப் பெண்கள் அமைச்சு, நிழல் அமைச்சு போன்றவற்றுடனும் சந்திக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

பெண்கள், சிறுவர், முதியோர் விவகாரம் தொடர்பாக நாம் எடுத்துவரும் முயற்சிகளிலும் புதிய ஆண்டில் முன்னெடுக்கவுள்ளவேலைத்திட்டங்களிலும் இணைந்து செயற்படஆர்வமுள்ளவர்களைகீழ்க்காணும் தொலைபேசியெண் மூலமோ மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புகொள்ளுமாறுதாழ்மையாக வேண்டிக் கொள்கிறோம்.

நல்ல மனிதர்கள் எதையும் செய்யாது இருப்பது, தீமை வெற்றிபெற எல்லா வாய்ப்புக்களையும் அளிப்பதாகஅமையும்’’ – எட்மண்ட் பேர்க்

நன்றி!

பாலாம்பிகை முருகதாஸ்

பெண்கள், சிறுவர், முதியோர் விவகார அமைச்சர்

தொடர்புகளுக்கான தொலைபேசி இலக்கம்.:- +44 7727 832 113

மின்னஞ்சல்: balambihai.m@tgte.org

More from our blog

See all posts