2011-10-21 அச்சத்துடன் மலேசியாவில் ஈழத்தமிழ் அகதிகள் !

  • September 9, 2013
  • WCE

2011-10-21 அச்சத்துடன் மலேசியாவில் ஈழத்தமிழ் அகதிகள் !

மலேசிய அரசாங்கத்தினால் அகதிகளுக்கான வதிவிட அனுமதி வழங்கப்படாத நிலை நீடித்து வரும் நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்ற அச்சத்துடனேயே ஈழத் தமிழ் அகதிகள் வாழ்ந்து வருவதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சிறுவர் பெண்கள் முதியோர் விவாகாரத்துறை அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் தெரிவித்தார்.

மலேசியாவுக்கான பயணமொன்றை மேற்கொண்டு பிரித்தானியாவுக்கு திரும்பியுள்ள அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ்அவர்கள்மலேசிப்பயணம்தொடர்பில்நாதம்ஊடகசேவைக்குவழங்கியஅனுபவப்குறிப்பிலேயேஇதனைஅவர்தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான சாசனத்தில் மலேசியா தன்னை இணைத்துக் கொள்ளாத நிலையில் அங்கு அகதித்தஞ்சம்சட்டபூர்வமாககோரமுடியாதநிலையுள்ளது. முள்ளிவாய்க்காலுக்குமுன்னரும்பின்னருமாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் மலேசியாவில் தஞ்சம் புகுந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

 

ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பான  UNHCR  நிறுவனமே மலேசியாவில் அகதித்தஞ்சம் கோருபவர்களின் விவகாரங்களைகையாண்டுவருகின்றது.

UNHCR நிறுவனத்தில் அகதிகளாக பதிவு செய்கின்றவர்களுக்கு வழங்கப்படுகின்ற பதிவுச்சிட்டையே அகதிகள் என்ற அவர்களுக்குஅடையாளத்தைவழங்குகின்றது.

இந்நிலையில் மலேசியாவில் உள்ள 4 ஆயிரம் ஈழத் தமிழ் அகதிகளில் ஆயிரம் பேர் அளவிலேயே இவ்வாறு பதிவு செய்தவர்களாக உள்ளனர் என மலேசியாவில் அகதிகள் விவாகாரம் குறித்து தெரிவித்த அமைச்சர் பாலம்பிகை முருகதாஸ் அவர்கள் அங்கு அகதிகளாக தஞ்சம் கோரியுள்ள ஈழ தமிழர்கள் குறித்த தெரிவித்தபோது

 

UNHCR அமைப்பினால் வழங்கப்படுகின்ற அடையாள அட்டை அகதிகள் மலேசியாவில் தற்காலிகமாக தங்குவதற்குரிய ஒருசட்டபூர்வபத்திரமாகஇல்லாதநிலையில்கல்விக்கோஅல்லதுமருத்துவதேவைகளுக்கோபாவிக்கமுடியாதநிலையில்உள்ளனர்.

குறிப்பாக இந்த அடையாள அட்டை பல காவல் துறையினர் அறிந்திராத நிலையில் ஒவ்வொரு நாட்களையும் மிகுந்த அச்சத்துடனும்நெருக்கடியுடனும்கழித்துவருகின்றனர். குறிப்பாக வெளிப்படையான தொழில் வாய்ப்புக்கள் அற்ற நிலையில் பல தமிழர்கள் சோளன் உடைத்துக் கொடுத்தே தங்கள் அன்றாடச் சீவியத்தை போக்கி வருகின்றனர்.

பெரும்பாலான மக்களின் கவலை அவர்களுடைய பிள்ளைகளின் கல்வி அவர்களின் எதிர்காலம் குறித்ததாகவே இருக்கின்றதுஎனதெரிவித்தார். இந்நிலையில்நாடுகடந்ததமிழீழஅரசாங்கம்எவ்வகையில்இந்தஅகதிகளுக்கானவிவகாரத்தைகையாள்கின்றதுஎனகேட்டபோது

 

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அகதிகள் விவகாரங்களுக்கான அமைச்சு UNHCR அமைப்பின்கீழ்பதிவுசெய்யப்பட்ட   STORM எனும்அமைப்பிஊடாக ஈழத்தமிழ்அகதிகளின்தேவைகளைகவனத்தில்எடுத்துஇயங்குகின்றது. இதன் நிர்வாக அமைப்பாளர்களாக திரு.பாஸ்கரன் திருமதி ரஞ்சினி ஆகியோர்உள்ளனர். பெரும்பாலான ஈழத் தமிழ் அகதிகளுக்கான தேவைகைள அமைப்பு வழங்கி வருவதோடு அவர்களுக்கான ஒரு பாதுகாப்பு மையமாகவும் இயங்கி வருகின்றது என தெரிவித்தார்.

பயணத்தின் ஊடக நா..அரசாங்கத்தின் சிறுவர் பெண்கள் முதியோர் அமைச்சின் ஊடாகபலஉதவிகளைபலரைச்சந்தித்துபெற்றுக்கொடுக்ககூடியதாகஇருந்ததெனதெரிவித்தஅமைச்சர்பாலாம்பிகைமுருகதாஸ்அவர்கள்சந்திப்புக்கள்குறித்துவிபரித்தபோது UNHCR நிறுவனத்தின் பிரதிநிதி Amanda அவர் களைச்ச ந்தித்து மலேசிய ஈழத்தமிழ் அகதிகளின் நிலை குறித்து உரையாடினோம்.

 

நா..அரசாங்கத்தின் சிறுவர் பெண்கள் முதியோர் அமைச்சின் ஊடாக அவர்களின் எத்தகையை தேவைகளை பூர்த்தி செய்யலாம்எனவிவதித்துகல்விமற்றும்மருத்துவஉதவிகளைஉடனடியாகவேஏற்பாடுசெய்துகொடுத்தோம்.

இதேவேளை மலேசியாவின் பீனாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர். ராமசாமி அவர்களையும் மற்றும் மலேசியஇலங்கையர்கொங்கிரஸ்தலைவர்டாற்தோரகுபதிஐயாஅவர்களையும்சந்தித்துஉரையாடியிருந்தோம்.

சிங்கப்பூரில் நின்ற ஒரிரு நாட்களின் அங்குள்ள ஈழத் தமிழர் மீது அக்கறை கொண்ட சிலரையும் குறிப்பாக பேராசிரியர்சொர்ணராஜாஅவர்களோடும்உரையாடியிருந்தோம்எனதெரிவித்தார்.

நிறைவாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறித்த பெருத்த நம்பிக்கையோடும்எதிர்பார்போடும்அங்குள்ஈழத்தமிழ்அகதிகள்உள்ளனர்எனதெரிவித்தஅமைச்சர்அவர்கள்எங்களுக்கானஒருஅரசாங்காம்இருக்கின்றதென்றமனவுறுதிஅங்குள்ஈழத்தமிழர்களின்வெளிப்பட்டது. இதே வேளை நாங்கள் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் நாங்கள் சந்தித்த பல பிரதிநிதிகளிடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான உலக அங்கீகாரமே எமது தமிழீழ அரசுக்கான ஒரு சட்டபூர்வஅங்கீகாரமாகஅமையும்என்றநம்பிக்கையோடுஉள்ளனர்.

இதற்கான தங்களின் முழுமையான ஒத்துழைப்பை அவர்கள் வழங்கதயாராகவும் உள்ளனர் என தெரிவித்தார்

More from our blog

See all posts