2012-04-01 சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டும்!- நிழல் அமைச்சர் Stephen Timmes MP.

  • September 14, 2013
  • WCE

இலங்கை மீது சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டும்!- பிரித்தானிய நிழல் அமைச்சர் Stephen Timmes

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஈழத்தமிழனத்தின் மீது  இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மானிடத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில், ஓர் சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டும் என்று பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், தற்போதையை நிழல் அமைச்சருமாகிய Stephen Timmes அவர்கள் தெரிவித்துள்ளார்.

லண்டன், ஈஸ்ற்ஹாமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் விவகார‌ங்களுக்கான அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட, பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே Stephen Timmes அவர்கள் இதனை வலியுறுத்தினார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

சர்வதேச நெருக்கடிகளுக்கான மூல ஆய்வமைப்பு, ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை, மற்றும் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட ஐநா தீர்மானமாகியவற்றை உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன்.

அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள், என்னை சந்தித்ததில் இருந்து, சர்வதேச நெருக்கடிகளுக்கான அமைப்பினால் வெளியிடப்பட்ட பெண்கள் சிறுவர்கள் நலனிலும் அக்கறை எடுத்துள்ளேன் என்றார்.

பெண்கள், சிறுவர், முதியோர் விவகார‌ அமைச்சினால் தயாரிக்கப்பட்ட மனு ஒன்றும் மக்கள் கையெழுத்துடன் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரிடம் கையளிக்கப்பட்டது என தெரிவித்தார்.

குறித்த அந்த மனுவை பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சின் கொள்கை வகுப்பாளர்களுக்கு, அனுப்பி வைப்பதாகவும் உறுதியளித்து உரையாற்றிய Stephen Timmes தொடர்ந்து மக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

பிரித்தானிய அரச இணையத்தில் உள்ள சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் மின்மனுவில் மக்கள் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டதுடன் அங்கே வந்தவர்களில் மின் மனுவில் கையெழுத்திடுவதற்கான ஏற்பாடும் செய்து  கொடுக்கப்பட்டது.http://epetitions.direct.gov.uk/petitions/14586

இந்நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதுடன், நியூகாம் கவுன்சிலர்கள், அக்ட் நவ் அமைப்பின் உறுப்பினர்கள், மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உதவி பிரதமரும் அமைச்சருமாகிய‌ திரு சேகர், அமைச்சர் திருமதி பாலாம்பிகை முருகதாஸ், உறுப்பினர்களான திரு செல்வராஜா, திரு வைரவமூர்த்தி, திரு மனோரஞ்சன், திரு மணிவண்ணன், திரு கவிராஜ், திரு யோகி, திரு நிமலன், மற்றும் திருமதி ஆர்த்தி ஆகியோரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சின் நிரந்தர செயலாளரன திரு ஜெயந்தன், மற்றும் உள்விவகார அமைச்சின் பிரித்தானிய இயக்குனர் திருமதி வாசுகி, ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் மக்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டதுடன் தொடர்ந்து ஒவ்வொரு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களையும் இது போன்று நாடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இதற்கு மக்கள் தங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு இருக்கும் என்ற உறுதி மொழியுடன் இனிதே நிறைவுற்றது.

More from our blog

See all posts