2012-05-18 லண்டனில் முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாள் மே18!

  • September 14, 2013
  • WCE

 7

  

 

 

முள்ளிவாய்க்கால் தமிழர் இனவழிப்பு நாளாகவும் பிரகடனம் செய்து, முன்னெடுக்கப்பட்ட நினைவு வணக்க நிகழ்வு கடந்த மே18 ஆம் திகதி ஈகைபேரொளி முருகதாசன் நினைவுத் திடலில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

பிரித்தானியா தலைநகர் லண்டனில் ஈகைபேரொளி முருகதாசன் நினைவுத் திடலில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றமுள்ளிவாய்க்கால் தமிழர் இனவழிப்புநாள்“ . 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை தமிழர் தாயகப்பகுதியில், சிங்கள அரச படைகளினால் திட்ட மிட்ட வகையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்லாயிரக் கணக்கில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ மக்களை நினைவு கூர்ந்து மே18 ஆம் திகதியை தமிழீழ தேசிய துக்க நாளாகவும்,   

நிகழ்வில் ஈகப்பேரொளி முருகதாசனின் தாயார். திருமதி வர்ணகுலசிங்கம் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றி வைத்து வணக்க நிகழ்வை ஆரம்பித்துவைத்தார்.

அதனைத் தொடர்ந்து பிரித்தானியத் தேசியக் கொடியும், தமிழீழத் தேசியக் கொடியும் ஒன்றின்பின் ஒன்றாக ஏற்றிவைக்கப்பட்டது. பிரித்தானிய தேசியகீதம் இசைக்க பிரித்தானியத் தேசியக் கொடியை அக்ட் நவ் அமைப்பின் பணிப்பாளர்  Mr. Graham Wilson அவர்கள் ஏற்றி வைக்க கோடி வணக்கமும் செலுத்தப்பட்டது, அதைத் தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடி வணக்கப்பாடல் ஒளிபரப்ப தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது.

 தமிழீழ தேசியக் கொடியை மிகநீண்டகால தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும், பிரித்தானியத் தமிழர் ஒன்றியத்தின் பிரதிநிதியுமான திரு .மாறன் அவர்கள் ஏற்றி வைக்க தமிழீழதேசியக்கொடி வணக்கமும் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மண் மீட்புப்போரில் மரணித்த மாவீரர்களுக்கும், மக்களுக்குமானஈ கைச்சுடரினை  நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணைப் பிரதமருமான திரு .உருத்திராபதி சேகர் அவர்கள் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு. விஸ்வனாதன் உருத்திரகுமாரன் அவர்களின் உரை அகன்ற திரையில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது.

வணக்க நிகழ்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணைப் பிரதமர் திரு. உருத்திராபதி சேகர்வெளிவிவகார அமைச்சர் திரு.தணிகாசலம் தயாபரன், பெண்கள் சிறுவர் விவகார அமைச்சர், திருமதி பாலாம்பிகை முருகதாஸ் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், பிரித்தானியா தமிழர் பேரவையின் தலைவர் உள்ளிட்ட , மூத்த பிரதிநிதிகளும், தமிழ்தேசிய நினைவேந்தல் இளையோர் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களும்,  பாடசாலைகள், கோவில்களின்  பிரதிநிதிகளும், அரசசார் பற்றதொண்டு நிறுவனங்களில் பிரதிநிதிகளும், அரசியல்பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

பிரித்தானியாபாராளுமன்றஉறுப்பினர்களான Mr.Virendra Sharma – MP for Ealing Southall, Ealing Councillor Mr.Julian Bell, newly elected GLA MEMBER Dr.Onkar Sohota, ACT NOW அமைப்பின்நிறுவனர் Mr.Tim Martin,

நாடு கடந்த தமிழீழ அரசின் பெண்கள் சிறுவர் விவகார அமைச்சர், திருமதி பாலாம்பிகை முருகதாஸ், மற்றும் IBC வானொலியின்கலையக அனுப்பியிருந்த செய்தியினை பிரித்தானிய தமிழர்பேரவையின் உறுப்பினரும், தமிழ்த்தேசிய நினைவேந்தல் அகவத்தின் உறுப்பினருமான, திரு.ஜெயந்தன் அவர்கள் வாசித்திருந்தார். 

More from our blog

See all posts