2012-03-08 ஈழத்தமிழர் தாயகத்தில் தொடர்கதையாகும் பெண்களின் அவலம் போக்கிட உலகப்பெண்கள் நாளில்  அணிதிரள்வோம்.

ஈழத்தமிழர் தாயகத்தில் தொடர்கதையாகும் பெண்களின் அவலம் போக்கிட உலகப்பெண்கள் நாளில்  அணிதிரள்வோம்.

ஈழத்தமிழர் தாயகத்தில்தொடர்கதையாகும் பெண்களின் அவலம் போக்கிட உலகப்பெண்கள் நாளில் அணிதிரள்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ;கள், சிறுவர், முதியோர் விவகார அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 8 – அனைத்துலகப் பெண்கள் நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள் அறிக்கையின் முழுவிபரம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் விவகார அமைச்சர் என்ற வகையில், உலகில் எங்கெல்லாம் பெண்களுக்கான நீதி, சமத்துவம், சுதந்திரம் மறுக்கப்படுகிறதோ அப்பெண்கள் சமூகத்தின் விடிவிற்காகாக மனஉறுதியோடு திடசங்கற்பம்கொண்டு போராடும் பெண்களுடன்; இன்றய இப்பெண்கள் தினத்தி;ல் கரம்கோர்த்துக் கொள்வதில் பெருமையும் உவகையும் அடைகின்றேன்.

சர்வதேச பெண்கள் தினமான இன்று தமிழீழ் பெண்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பற்ற நிலை பற்றி உலகுக்கு எடுத்துரைப்பதை என் தலையாய கடமையாகக் கருதுகிறேன். உலகின் மனிதநேய நிறுவனங்களில் ஒன்றான சர்வ தேச நெருக்கடிக்குழு 20.12.2011 அன்று வெளியிட்ட ஆசிய அறிக்கை இல.217, சிறிலங்காவின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் பெண்கள் அனுபவிக்கும் துன்பதுயரங்கள் மற்றும் சிறிலங்கா அரசாங்கம் வடக்கு, கிழக்கு பகுதிகளில் தனது சிங்கள இராணுவத்தை குவித்துள்ள காரணத்தால் குறிப்பாக தமிழ் பெண்கள் முகம்கொடுக்கும் பாதுகாப்பற்ற சூழல், பாலியல் துஸ்பிரயோகம், விபச்சார நிர்ப்பந்தம், சிறுமிகள் கற்பம் தரிக்கும் சம்பவங்கள், பாதிப்புற்ற பெண்கள் நீதி கேட்கவோ அன்றி சட்ட பரிகாரம் தேடிக்கொள்ளவோ, சிகிச்சை பெற்றுக்கொள்ளவோ முடியாத சூழ்நிலை போன்ற கொடுமைகளை உலக சமூகத்திற்கு அம்பலப்படுத்தியுள்ளது.

சிறிலங்கா அரசாங்கமானது தனது இராணுவம் புரியும் பாலியல் கொடுமைகளை, அத்துமீறல்களை தொடர்ச்சியாக மறுத்து வருவது மிகவும் கவலைக்குரியதும் ஏமாற்றம் அளிப்பதுமாகும். பாதிப்புற்ற சமூகம் சார்பில் குரல்கொடுத்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தும் சர்வதேச சமூகத்தை, இது தனது உள்நாட்டு விவகாரம், தனது மக்களை தானே பாதுகாத்துக்கொள்ள முடியுமென்ற காரணங்களைக்கூறி தடுத்துவருவது, உண்மையில் தனது இராணுவம் புரியும் அத்துமீறல்கள், பாலியல் கொடுமைகளுக்கு திரைமறைவில் தூபமிடும் செயலாகும்.

போருக்கு முன்னரான இராணுவ நடமாட்டம் குறைந்த காலப்பகுதியில், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இரவு பகல் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் பெண்கள் எவ்வித அச்சமுமின்றி பாதுபாப்புணர்வுடன் நடமாடக்கூடிய சூழ்நிலை நிலவியுள்ளது என்பதை சர்வதேச நெருக்கடிக்குழு தனது அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது. ஆனால், யுத்தத்தின் கோர முடிவின் பின் பெண்களுக்கெதிரான பாலியல் பலாத்காரம், துஸ்பிரயோகம் என்பன முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமடைந்து அதிகரித்துள்ளது. 2011 ஆண்டுப் பகுதியில்மட்டும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சிறுமிகள் கர்ப்பம் தரித்தல் கணிசமான அளவு கூடியுள்ளதாக யாழ்ப்பாணப் பிரதேசஅரச அதிபர் திருமதி இமெல்டா  சுகுமார் கூறியுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ‘கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு’ அறிக்கையை பல நிறுவனங்கள் விமர்சித்துள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழர் தேசிய மக்கள் முன்னணி, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், பிரதான கட்சிகளைச் சேர்ந்த பிருத்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள், சர்வதேச நெருக்கடிக் குழு, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வ தேச மன்னிப்புச் சபை ஆகியன அறிக்கையை விமர்சித்த நிறுவனங்களில் சிலவாகும்.

ஆனால், உள்நாட்டுத் தமிழ் மக்கள் இவ்வறிக்கை பற்றி வாய்திறக்க முடியாத அளவுக்கு அவர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. இராணுவ பயமுறுத்தல் மூலம் அடிபணிய வைக்கப்படுகிறார்கள். ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இத்தகைய கொடூர நடவடிக்கைகளினால், அதேசமயம் இவற்றை எல்லாம் கண்டும் காணாதது போல் நடந்துகொள்ளும் சர்வதேச சமூகத்தின் பாராமுகத்தால், தமிழ் மக்களின் இன்னல்கள் தொடர்கதையாவது கவலைக்குரியது

எனவே, இன்றய இம்மேலான சர்வதேச பெண்கள் தினத்தில் நாம் சர்வதேசத்திடம் வேண்டிக் கேட்டுக்கொள்வதெல்லாம், உரிமைகள் மறுக்கப்பட்டு நீதிக்காக ஏங்கும் ஈழத்தமிழர் சார்பில் தர்மத்தின் பேரால் தலையிட்டு சின்னாபின்னமாகும் தமிழர் சமுதாயம் உரிமைகள் பெற்று தலைநமிர்ந்து வாழ ஆவன செய்யுங்கள் என்பதே.

உலகில் வாழும் ஒவ்வொரு பெண்களும் நசுக்கப்டும் பெண்களுக்காக குரல் கொடுக்கவேண்டும், ஈழத்திலும் சரி உலகின் எந்த மூலையிலும் சரி பெண்களுக்கெதிரான அநீதிகளைச் சாடும் வகையில் திரண்டெழுந்து, அவர்களின் அவலநிலை போக்க அணிதிரள்வோம்.

திருமதி பாலாம்பிகை முருகதாஸ்

பெண்கள், சிறுவர்கள் முதியோர் விவகார அமைச்சர்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

More from our blog

See all posts