2012-01-23 கனேடிய வெளிவிவகார அமைச்சரை தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள்

  • September 9, 2013
  • NEWS

கனேடிய வெளிவிவகார அமைச்சரை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்தனர்

லண்டனுக்கு வருகை தந்திருந்த கனேடிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜோன் பெயிர்ட் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.

முடிக்குரிய பொதுநலவாய சங்கத்தின் ஏற்பாட்டில் 23-01-2012 அன்று இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பிலான கருத்தரங்கொன்றியே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த இந்த மாநாட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் விவகார அமைச்சகம்  ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

ஈழத்தமிழ் மக்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தை முன்னிறுத்தி இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசாங்கங்களது அடக்குமுறைகள் குறித்து கனேடிய வெளிவிவகாரத்துறை அமைச்சரின் கவனத்துக்கு எடுத்துக் கூறப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மனிதஉரிமை, வகைகூறல் விடயங்களில் திருப்திகரமான முன்னேற்றங்கள் ஏற்படவில்லையானால், அங்கு அடுத்ததாக நடைபெறவிருக்கும் பொது நலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் கனடா பங்கு பற்றுவதை மறுபரிசீலனைக்கு உட்படுத்தலாம் என்றும் ஏனைய பல நாடுகளும் இந்நடைமுறையைப் பின் பற்றலாம்.
இலங்கையின் நடவடிக்கைகளை கனடா உட்பட உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டும், அழுத்தம் கொடுத்துக்கொண்டும் உள்ளன என்றும் ஆனால் சிறிலங்கா கடும் போக்கைக் கடைப்பிடிக்கின்ற காரணத்தால் விடயங்களை முன்னகர்த்திச் செல்வதில் முட்டுக்கட்டைகள் ஏற்படுகின்றன என்று கனேடிய வெளிவிவகார அமைச்சர ஜோன் பெயிர்ட் (John Baird) அவர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகளுக்கு கூறிய பதிலுரையில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கனேடிய வெளிவிகாரத்துறை அமைச்சரிடம் மனுவொன்றினையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் கையளித்துள்ளனர்.

இந்தச் சந்திப்பின் போது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் விவகார அமைச்சகத்தின் சார்பில் அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் , அரசியல் ஆலோசகர் விஜயா ரத்தினம் , இயக்குனர் (பிருத்தானியா) முருகதாஸ், நிரந்தர செயலர் ஜெயந்தன் ஆகியோருடன் தேர்தல் ஆணையாளர் டொக்டர் ராஜஜோகேஸ்வரன் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.

 

More from our blog

See all posts