மந்தகதியிலேயே சிறிலங்காவின் செயற்பாடுகள் : ஐ.நா மனித உரிமைச்சபையில் குற்றச்சாட்டு

  • September 29, 2016
  • HRC

அனைத்துலக சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து சிறிலங்கா தவறி வருவதாக அமெரிக்காவின் பிரபல சட்டவாளர் Andrew Ianuzzi அவர்கள், ஐ.நா மனித உரிமைச்சபையில் குற்றஞ்சாட்டினார்.

தற்போது நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச்சபையில் 33வது கூட்டத்தொடரில், சிறிலங்காவினை மையப்படுத்தி நாடுகடந்த தமிழீ அரசாங்கத்தினால் ஒருங்கு செய்யப்பட்டிருந்த உப நிகழ்வொன்றிலேயே இக்கருத்தினை அவர் வெளிப்படுத்தினார்.

போர் குற்றங்கள், இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் என பாரிய மனித உரிமைமீறல் விவகாரங்களில் அனைத்துலக மட்டத்தில் பிரசித்தி பெற்ற சட்டவாளராக இருக்கின்ற Andrew Ianuzzi அவர்கள்

சிறீலங்காவின் நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளை கண்காணிக்கவென நா.தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளri Lanka – Monitoring Accountability Panel (MAP) பன்னாட்டு நிபுணர்களை குழுவில் அங்கம் வகிக்கின்றார்.

சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் கடந்தாண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதாக அனைத்துலக அரங்கில் ஒத்துக்கொண்ட சிறிலங்கா அரசாங்கம், அதனை நடைமுறைப்படுத்துவதில் முறையாகச் செயற்படவில்லையென Andrew Ianuzzi அவர்கள் தெரிவித்திருந்தார்.

குறிப்பாக, காணமால் போனவர்கள் தொடர்பிலான விசாரணைப் பொறிமுறைக்கு ஐ.நா மனித உரிமைச்சபைத் தீர்மானம் வழங்கியிருந்த வழிகாட்டு நடைமுறைகளுக்கு மாறாக, தன்னிச்சையான முறையில் காணாமல் போனவர்களுக்கான பொறிமுறையினை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை நீதிவிசாரணைப் பொறிமுறையில் அனைத்துலக நீதிபதிகளின் பங்காற்றலை தொடர்ந்து நிராகரித்து வரும் சிறிலங்காவின் போக்கு, அனைத்துலக சமூகத்திற்கு தான் வழங்கிய வாக்குறுதிகளை மீறும் செயல் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த உப நிகழ்வினை தென்னாபிரிக்காவைச் சேர்ந்த சட்டவாளர் அவர்கள் நெறிப்படுத்தியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

hrc-sep-22-1
hrc-sep22
s1820016
s1820021
s1820023
s1820024
s1820027
s1820031
s1820032
s1820034

More from our blog

See all posts