Lawyers Event in Chennai (India) to Challenge Sri Lankan Government at the United Nations

  • January 9, 2017
  • TGTE

 Several high-profile lawyers and leaders of Law Societies are meeting in Chennai on January 9th (Monday) at 4:00 pm to join a motion challenging Sri Lankan Government at the United Nations.

When: January 9th (Monday).
What: To challenge the Sri Lankan Government at the United Nations.
Where: Thiravidar Periyar Kalaka Office
Address: 95 Nadesan Street, Chennai 4, Tamil Nadu (Close to Ambetkar bridge).

For information call: 9444145803, 9751524004

ஈழத் தமிழர்களை அடிமைகள் ஆக்கிட முற்படும் சிங்கள அரசின் 6-ஆம் சட்டத்திருத்த சதியை முறியடிக்க தமிழக வழக்கறிஞர்களே அணிதிரள்வோம். வழக்கறிஞர்கள் கையெழுத்து இயக்கம் தொடக்க நிகழ்வு

இடம்: திராவிடர் பெரியார் கழக அலுவலகம், 95, நடேசன் சாலை, மயிலாப்பூர், சென்னை-4 (அம்பேத்கர் பாலம் அருகில்)

.

This motion will be filed with the UN Human Rights Committee stating that the 6th amendment to the Sri Lankan Constitution is a violation of freedom of speech and conscience guaranteed in Articles 18 and 19 of the International Covenant on Civil and Political Rights.

This motion was initiated by Former US Attorney General Ramsey Clark, Justice K.P.Sivasubramaniam (Retd), Former Judge of the High Court of Madras, India, and Prime Minister of The Transnational Government of Tamil Eelam (TGTE) Visuvanathan Rudrakumaran.

The Sixth Amendment to the Constitution of Sri Lanka criminalizes the exercise of the Tamil’s right to self determination in the form of an independent state in accordance with UN General Assembly Resolution 2625 (1970) which is considered as customary international law.

Presently it is stated that attempts are being made to resolve the Tamil national question. We believe that it is imperative that during this phase that Tamils should be allowed to express their political aspirations without any hindrance. Thus the envisaged challenge is a timely one.

The TGTE calls upon lawyers from the homeland, the Tamil Diaspora, global Tamils and progressive lawyers around the world to provide legal representation to this communication before the UN Human Rights Committee.

It is to be emphasized that, while the 6th Amendment criminalizes advocacy for an independent state for the Tamils in Sri Lanka, calling for the repeal of the 6th Amendment is not prohibited.

To join please visit: www.tgte-6un.org

This present call by the TGTE to lawyers across the globe is reminiscent of the 1976 Trial-at-Bar proceedings against the Tamil leaders for distributing to the public copies of the Vaddukoddai Resolution (which called for an independent state). A record number of 67 lawyers represented the Tamil leaders then, including the late S.J.V. Chelvanayagam QC, the late G.G. Ponnampalam QC, and the late M. Thiruchelvam QC.

The TGTE will be citing several international jurisprudence including European Court of Human Rights cases.

For information contact attorney David Matas (email: dmatas@mts.net) who is coordinating this endeavor.

“I disapprove of what you say but I will defend to the death your right to say”

Web: www.tgte-6un.org

அன்பிற்குரிய தமிழக வழக்கறிஞர்களே,

இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் மீது அளப்பரிய அன்பினை வைத்து அவர்களை ஆதரித்து வருவதில் தமிழக வழக்கறிஞர்கள் சமூகம் முக்கியப் பங்காற்றி வருகின்றது. இலங்கையில் 2009-ல் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்கிற பெயரில் கொத்துக்கொத்தாய் நம்மின சொந்தங்கள் குண்டு வீசி அழிக்கப்பட்ட போது ஒரே அமைப்பாக ஒத்த குரலாக, செயலாக தமிழக வழக்கறிஞர்கள் இயங்கியதை ஈழவிடுதலைப் போரில் பங்கெடுத்தவர்கள் நன்றியுணர்வோடு போற்றுகின்றனர்.

போருக்குப் பிந்தைய இப்போதைய நிலையில், தமிழர்களின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் நிலைகொண்டுள்ளது ராணுவம். தமிழர்கள் தங்கள் ஆயுதம்தாங்கிய போராட்டத்தை தொடர முடியாத நிலையில் சர்வதேச சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கும் விதமாக ஈழத்திலும், உலக நாடுகளிலும் அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதை எதிர்கொள்ள முடியாத சிங்கள அரசு இலங்கை அரசின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் 6 வது சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர முடிவு செய்துள்ளது. இது அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது. சர்வதேச மனித உரிமை ஒப்பந்தங்களுக்கும் எதிரானது. ஈழத்தமிழர்களை உரிமைகள் ஏதுமற்ற அடிமைகளாக மாற்றுவதற்கான உள்நோக்கம் கொண்டது.

ஏற்கனவே இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்கப்படாத நிலையில், தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய சட்டத்திருத்தம் என்பது அவர்களை முற்றிலும் முடக்கி அவர்கள் அழுகுரல்கூட எழுப்ப முடியாத சூழலை உண்டாக்கிவிடும்.

மேலும், இச்சட்டத்திருத்தம் சுதந்திரத் தமிழீழம் கோருவதையோ, அது தொடர்பான அமைதிவழிப் போராட்டங்கள் நடத்துவதையோ அதற்காக எந்த ஒரு அமைப்பாக இயங்குவதையோ தடைசெய்கின்றது. இச்சட்டத்தின்படி அரசு யாரையும், பொய்யான குற்றச்சாட்டில் கைதுசெய்து அவர்களை 7 ஆண்டுகள் வரையில் சிறையில் அடைக்கவும், அவர்களின் சொத்துக்களை, அவர்கள் குடும்பத்தினர் யாருடைய சொத்துக்களையும் பறிமுதல் செய்யவும் இடம் அளிக்கின்றது.

இத்திருத்தத்திற்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலக ரீதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழுவில் தனது சட்டப்போராட்டம் ஒன்றை சர்வதேச குடியியல், அரசியல் பிரகடனத்தின் 18 மற்றும் 19 ஆவது பிரிவுகளில் உறுதி செய்யப்பட்ட கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் ஆகியவற்றை மீறுகிறது என்ற அடிப்படையில் ஆரம்பிக்க உள்ளது.

இதற்கான உலகளாவிய வழக்கறிஞர்கள் அணிதிரட்டலை நாடு கடந்த தமிழீழ அரசு முன்னெடுத்துள்ளது. மனித உரிமைகள், அனைத்து மக்களுக்கும் நீதி மற்றும் நியாயம் வழங்கப்பட வேண்டும் என்பதில் அக்கறையும், ஆர்வமும் கொண்ட வழக்கறிஞர்களை அழைக்கின்றது. ஐநா மனித உரிமைகள் குழுவின் முன்வைக்கப்படும் அந்த மனுவில் தமிழர்களின் சார்பாக வாதிட தமிழக வழக்கறிஞர்களையும் பங்கேற்க அழைக்கின்றது.

இம்மனுவில் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி திரு.பழனிச்சாமி சிவசுப்பிரமணியம், அமெரிக்க முன்னாள் அட்டார்னி ஜெயரல் திரு.ராம்சி கிளார்க், சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் அமெரிக்க செயலக சட்ட ஆலோசகர் திரு.பீட்டர் குஜோ, பிரான்ஸ் மனித உரிமைகள் வழக்கறிஞர் திரு.ஜில் பிக்குவா ஆகியோர் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் திரு.ருத்ரகுமாரன் அவர்களுடன் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தனர்.

இந்த மனுவில் கையெழுத்திட்டு தமிழர்களின் சார்பான முறைப்பாட்டில் பங்கெடுக்க விரும்புகின்ற வழக்கறிஞர்கள் www.tgte-6un.org என்கிற இணையதள முகவரியில் சென்று கையொப்பமிடலாம். மேலும், தமிழகம் தவிர்த்த பகுதிகளில் இக்கருத்தில் உடன்பாடுள்ள மனித உரிமைச் செயற்பாட்டு வழக்கறிஞர்களையும் இணைத்திட உதவுமாறு நாடு கடந்த தமிழீழ அரசு தமிழக வழக்கறிஞர்களைக் கேட்டுக்கொள்கின்றது.

மேலும் தங்கள் ஐநா முறைப்பாடு தொடர்பாக கருத்துக்களைத் தெரிவிக்க தொடர்புக்கு dmatas@mts.net

T. Thamizahinian
Tholamai Miyam
9444145803, 9751524004.

More from our blog

See all posts