சிறிலங்கா தொடர்பில் அனைத்துலக விசாரணை கோரும் தீர்மானம் பரகுவே அரசவையில் நிறைவேற்றம் !

  • September 23, 2015
  • TGTE

சிறிலங்காவை மையப்படுத்தி ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடர் பரப்பரப்படைந்துள்ள வேளை, சிறிலங்கா தொடர்பில் அனைத்துலக விசாரணை கோரும் தீர்மானமொன்று பரகுவே அரசவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்மக்களது நீதிக்கு உறுதுணையான சுதந்திரமான அனைத்துலக விசாரணையினை ஐ.நா மனித உரிமைச்சபையினை கோருவதாக (PROYECTO DE DECLARACION: QUE EXHORTA AL PODER EJECUTIVO A APOYAR EL PEDIDO DE LA COMUNIDAD TAMIL DE SRI LANKA AL CONSEJO DE DERECHOS HUMANOS DE LAS NACIONES UNIDAS A REALIZAR UNA INVESTIGACIÓN INTERNACIONAL E IMPARCIAL EN SRI LANKA SOBRE LOS HECHOS OCURRIDOS A LA COMUNIDAD TAMIL) José María Ibáñez அவர்களினால் சபையில் முன்மொழியப்பட்டுள்ளது.

http://www.diputados.gov.py/ww2/?pagina=noticia&id=13844

சமீபத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் தலைமையில் புலம்பெயர் தமிழர் அமைப்பு பிரதிநிதிகள் குழுவொன்று பரகுவே நாட்டுக்கு சென்று பரகுவே அரச உயர்மட்டச் சந்திப்புக்களை நடத்தியிருந்தது.

இந்நிiயில், பரகுவே அரசவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானம் ஈழத்தமிழ்மக்களது நீதிக்கான போராட்டத்துக்கு வலுசேர்த்துள்ளதோடு, பரகுவேயில் உள்ள பல மனித உரிமைவாதிகள் எமக்காக குரல் கொடுக்க தொடங்கியிருப்பது, புதிய நம்பிக்கைகளை நமக்கு அளிப்பதாக, நா.தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் மாணிக்கவாசகர் கருத்து தெரிவித்துள்ளார்.

பரகுவேயின் பிரபல மனித உரிமைவாதியான María Stella Cáceres அவர்கள், ஈழத்தமிழ் மக்களது நீதிக்கான போராட்டத்தில் தன்னையும் தற்போது இணைத்துள்ளதோடு, அதற்கான குரலியினையும் பரகுவே ஊடகங்களில் வெளிப்படுத்துகின்றார் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

 

Paraguay
 ong_sri_lanka

More from our blog

See all posts