TAMIL EELAM NATIONAL CARD

நாம் ஓர் தேசிய இனம் என்பதை அடையாளப்படுத்தற்குரிய ஓர் ஆவணம் தேசிய அட்டை. தாயகம், தேசியம், தன்னாட்சி கொண்ட இறமையுள்ள சுதந்திர தமிழீழமே தமிழீழம் ஆகும். இதில் தாயகம் சிங்கள பேரினவாதத்தால் ஆளுகைக்கு உட்படுத்தபட்டுள்ளது. ஆனால் எமது (இனம்) தேசியம் என்ற மொழி, கலை, கலாசாரம், பண்பாடு போன்றவற்றை யாராலும் ஆளவும் முடியாது, அழிக்கவும் முடியாது. ஓர் தேசிய இனமாக எம்மை அடையாளப்படுத்தக்கூடிய ஒரே வழியாக நாடு கடந்த அரசினால் அறிமுகப்படுத்தபட்ட தேசிய அட்டை உள்ளது. உலக நீரோட்டத்திற்கு அடையாளப்படுத்தும் முகமாகவும் நாடுகளிலே நடைமுறையில் உள்ள ஒரு முறையாகவுமே தேசிய அட்டை அறிமுகப்படுத்தபட்டது.

இது ஒவ்வொரு புலம்பெயர் தமிழனிடமும் இருக்க வேண்டிய ஓர் தேசிய அடையாளம். ஊதாரணமாக பிரித்தானியாவில் மூன்று இலட்சம் தமிழர்கள் உள்ளார்கள் என 2009ம் ஆண்டு இடம்பெற்ற ஊர்வலத்தை வைத்தே கணிப்பிடப்படுகின்றது. ஆனால் புள்ளிவிபர அடிப்படையில் உண்மையான புள்ளிவிபரங்கள் எதுவும் எமது அமைப்புக்களிடம் இல்லை அதை நிவர்த்தி செய்யவும் இந்த தேசிய அட்டை மிகவும் முக்கியம் வாய்ந்தது. நாளை மலர இருக்கும் சுதந்திர தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு புலம்பெயர் தேசத்திலும் நடத்த வேண்டும் என்பதையும் உலகிற்கு எடுத்துக்காட்ட இந்தப் புள்ளிவிபரம் மிகவும் அத்தியாவசியமானது.

கீழ்வருவனவற்றுள் ஏதாவது ஒன்று உங்களுக்குப் பொருந்துமாயின் தேசிய அட்டை பெறும் தகுதி உடையவராகின்றீர்கள்.

1) தமிழீழத்தில் பிறந்தவர்

2) சிறிலங்காவில் பிறந்த தமிழ் பேசுபவர்

3) வெளிநாடுகளில் பிறந்த ஈழத்தமிழரின் பிள்ளைகள் அல்லது உறவினர்கள்

4) தமிழீழத்தை ஏற்றுக்கொள்ளும் ஒருவர்

எவ்வாறு விண்ணப்பிப்பது?

a) நாடுகடந்த தமிழீழ உறுப்பினர்கள் மூலமாக

b) http://govthamileelam.org/ என்னும் இணையத்தளத்தினூடாக

c) tencard.application@tgte.org  என்னும் மின்னஞ்சல் ஊடாக

உங்கள் விபரம் யாரிடமும் பகிரப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தை நாடுகடந்த அரசாங்கம் உங்களுக்குத் தருகின்றது.

Application Form