சர்வதேச மனித உரிமை நாளில் நீதியின் ஒரு தேடலாக பிரித்தானியாவில் ….

சர்வதேச மனித உரிமை நாளில் தாயக மண்ணிலே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தும் உலகத்தின் கண்ணை நீதியின் வழி நின்று தட்டித் திறக்கவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒரு கருத்தரங்கு மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம்மாநாடு 10.12.2017 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணி தொடக்கம் மாலை 05:00 மணி வரை நன்கு திட்டமிட்டு சிறப்பான முறையில் நடைபெற்றது.

மேலும் இந்த கருத்தரங்கில் 7வகையான குழுக்கலாக பிரிக்கப்பட்டு அந்தந்த குழுக்கழுக்கான வீத்திரன் மிக்க செயற்பாடுகளை தனித்தனி கலந்துரையாடி இறுதியில் இவற்றின் சாராம்சம் சார்ந்த ஒரு ஆய்வாக எப்படியான செயற்பாட்டின் மூலம் இவற்றை முன்னிறுத்தி செயற்படலாம் என்ற முடிவும் எடுக்கப்பட்டது.

இதனை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளும் தொகையான கொடூரங்கள் இனவழிப்பிற்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பான அமைச்சர் பத்மநாபன் மணிவண்ணன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

இந்த மாநாட்டில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதி நிதிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் என இதில் கலந்து கொண்டு நீதிக்கான வேட்கையில் தமக்கான குரல்களாக நாடு கடந்த அரசாங்கம் சார்பாக பிரதிபலித்தனர்.

ஊடகப்பிரிவு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

TGTE UK MEDIA

Print Friendly