மூன்றாம் நாளில் அரசவை அமர்வு : அரசியலமைப்பில் சட்டத் திருத்தம் !!

அமெரிக்காவில் இடம்பெற்று வருகின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக் கூட்டத் தொடர் மூன்றாவது நாளாக இடம்பெற்று வருகின்றது.

அரசாங்கத்தின் சட்டவாக்க குழுவினால் முன்வைக்கப்பட்ட அரசயலமைப்பு திருத்தங்கள் அவையின் விவாதத்துக்கு எடுத்துக் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

32 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், தனித்தனியே ஒவ்வொன்றும் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.

அமெரரிக்காவின் மைய அமர்வோடு, லண்டனில் இருந்தும், தொலைத்தொடர்பு வழயிலும் மறுதொகுதி உறுப்பினர்கள் சமவேளை பங்கெடுத்திருந்தனர்.

விவாதங்களுடனும், கருத்துப்பரிமாற்றங்களுடனும் இத்திருத்தங்கள் அரசவையில்
எடுத்தாளப்பட்டிருந்தன.

இன்றைய அரசவை அமர்வு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சனநாயகத்தன்மையினை வெளிப்படுத்தி இருந்ததோடு, ஒவ்வொரு அரசவை உறுப்பினர்களதும் கூட்டுப்பொறுப்பினையும் வெளிப்படுத்தி இருந்ததாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சுப் பொறுப்புக்களுக்கு இருந்த இரண்டு தவணைக்காலம் என்ற நிலை,இன்றைய திருத்தம் மூலம் நீக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

More from our blog

See all posts