நாடு கடந்த தமிழீழ அரசின் சார்பில் தமிழகத்தில் விளையாட்டுப் போட்டிகள் !

  • October 9, 2017
  • TGTE

 திருவண்ணாமலை & காஞ்சிபுரம், தமிழகம்,October 4, 2017

நாடு கடந்த தமிழீழ அரசின் சார்பில் தமிழிகத்தில் நடைபெற்று வந்த விளையாட்டுப் போட்டிகளின் பரிசளிப்பு விழா 01/10/2017 அன்று நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் மாத்தூரில் நடைபெற்ற போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் ச,தீனன் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.

தியாகி திலீபன் நினைவுக் கோப்பையுடன் கூடிய முதல் பரிசு ரூ,10000 த்தை மாமண்டூர் இளைஞர் அணியினர் பெற்றனர்.

தியாகி முத்துக்குமார் நினைவுக் கோப்பையுடன் கூடிய இரண்டாம் பரிசு ரூ8000 த்தை மாத்தூர் இளைஞர்கள் பெற்றனர்.

அன்னை பூபதி நினைவுக் கோப்பையுடன் கூடிய மூன்றாம் பரிசு ரூ,5000 த்தை நமண்டி விளையாட்டு அணியினர் பெற்றனர்.

நிகழ்வில் நினைவுக் கோப்பைக்குரிய தியாகிகள் குறித்தும் நாடு கடந்த தமிழீழ அரசு குறித்தும் இளைஞர்களுக்கு விளக்கி நாடு கடந்த தமிழீழ அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழினியன் மற்றும் முகேசு தங்கவேல் அவர்களும் உரையாற்றினர்.

நாடு கடந்த தமிழீழ அரசினை ஆதரிக்க இளைஞர்கள் தயாராகிவர வேண்டும் என்பதை வலியுறுத்தி ச. தீனன் அவர்கள் உரையாற்றினார்.

இதன் இரண்டாம் நிகழ்வாக மாலையில் காஞ்சிபுரம் மாவட்டம் வில்லியம்பாக்கத்தில் நடைபெற்ற கை பந்துப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்த்தேசிய சிந்தனையாளர் தே,பவணந்தி அவர்கள் கலந்துகொண்டு முதல் பரிசு ரூ8000 பெற்ற அணியினருக்கு பரிசினையும் தந்தை செல்வா நினைவுக் கோப்பையையும் வழங்கினார்.

இரண்டாம் பரிசு ரூ,5000 த்தையும் தியாகி முருகதாஸ் நினைவுக் கோப்பையையும் வாலாஜாபாத் நகரில் உள்ள தமிழ்த்தேசிய சிந்தனையாளர் சங்கர் அவர்கள் வழங்கினார்

மூன்றாம் பரிசு ரூ,2000 த்தையும் தியாகதீபம் முத்துக்குமார் நினைவுக் கோப்பையையும் அந்த கிராமத்தைச் சேர்ந்த நாட்டாமை பஞ்சாட்சரம் அவர்கள் வழங்கினார்.

வில்லியம்பாக்கம் நிகழ்வுகள் அனைத்தையும் தமிழ்த்தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த தோழர் வெற்றித் தமிழன் அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசின் சார்பில் தமிழகத்தில் மக்கள் மத்தியில் நடைபெறும் முதல் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Phone: தமிழகம்: +(91) 975-152-4004

Email: mathuriniyan@gmail.com

நாடு கடந்த தமிழீழ அரசு
Transnational Government of Tamil Eelam (TGTE)
+(91) 975-152-4004

More from our blog

See all posts