பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் மூன்றாவது தடவையாக நடைபெற்ற பிரமாண்டமான விளையாட்டு விழா !

  • August 5, 2017
  • TGTE

உலகமெங்கும் பரந்து வாழுகின்ற ஈழத்தமிழ் மக்கள் தமிழீழம் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உலக நாடுகளிடம் முன்வைத்து அதற்கேற்ப இயங்கி வருகின்றனர்.

அதற்கேற்ப புலம்பெயர் தேசமெங்கும் சிதைந்து கிடக்கும் ஈழத் தமிழர்களை ஒன்றினைக்க வேண்டியது அவசியமாகின்றது.

இவர்களை இணைக்கும் முயற்சியாக சமூகத்தில் வாழும் அனைவரையும் பால், வயது வேறுபாடின்றி ஒன்றினைக்க பொது ஊடகமாக விளையாட்டு விளங்குகின்றது.

பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் மூன்றாவது தடவையாக MORDEN PARK, LONDON ROAD, SM4 5HE எனும் இடத்தில் மிக பிரமாண்டமாக விளையாட்டு விழா நடைபெற்றது.

இதனை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை மற்றும் சமூக நலன் பிரதியமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் அவர்களின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வு காலை 09 மணியளவில் விளையாட்டு அணிகளுக்கான பதிவு இடம்பெற்று காலை பத்து மணிக்கு பிரதம வருந்தினர்களை அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மக்கள் விளக்கேற்றப்பட்டு பிரித்தானி தேசியக் கொடி ஏற்றப்பட்டு தமிழீழ தேசியக் கொடி மரியாதையுடன் ஏற்றப்பட்டது. தொடர்ந்து விளையாட்டு விழா ஆரம்பிக்கப்பட்டது.

உதைபந்தாட்டப்போட்டி, துடுப்பாட்டம், சிறுவர்களுக்கான போட்டி, வலைப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், பாரம்பரிய விளையாட்டுக்களான கிளித்தட்டு, கபடி, கயிறிழுத்தல் என்பன இடம்பெற்றது.

இறுதியாக வெற்றி பெற்ற வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் பரிசுகள், வெற்றிக்கிண்ணங்கள் என்பன வழங்கப்பட்டு கொடி இறக்கலுடன் விழா இனிதே நிறைவுற்றது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை மற்றும் சமூக நலன் பிரதி அமைச்சர், ஏனைய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் பொது மக்கள் என பல்லாயிரக் கணக்கினர் கலந்த இவ் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது..

More from our blog

See all posts