பன்னாட்டு சட்டவாளர்கள் துணையுடன் ஐ.நா. வில் சிறிலங்காவை எதிர்கொள்கிறது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

  • October 30, 2016
  • TGTE
ramsey_clark-2சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஐ.நாவில் மற்றுமொரு நெருக்கடியினை பன்னாட்டு சட்டவாளர்கள் துணையுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்காவின் ஆறாம் திருத்தச் சட்டமூலத்தினை மையப்படுத்தி, இந்த நெருக்கடியினை ஐ.நாவின் மனித உரிமைக் குழுவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்காவின் ஆறாம் திருத்தச் சட்டமூலமானது ஐ.நா. சபையின் சிவில் மற்றும் பொது மக்கள் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் 18ம் 19 சரத்துகளில் குறிப்பிட்பட்டுள் கருத்து வெளியிடும் சுதந்திரத்தை மீறும் வகையில் அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டியே இந்த நெருக்கடியினை சிறிலங்காவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.

k-p-sivasubramaniamஅமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் ரம்சி கிளார்க், தமிழகத்தின் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி இளைப்பாறிய நீதியரசர் கே.பி.சிவசுப்பிரமணியம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் ஆகியோர் தலைமையில் இந்நெருக்கடி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஐ.நாவின் மனிதவுரிமை குழுவில் முறையீடு செய்யவுள்ளனர்.

ஐ.நா. பொதுச்சபையின் தீர்மானம் 2625 (1070) வழமையான சர்வதேசச் சட்டமாகவுள்ளதன் அடிப்படையில், தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தனிநாட்டை உருவாக்குவது தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபடுவது சிறிலங்கா அரசியலமைப்பின் ஆறாம் திருத்தத்தில் தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டுள்ளது.

தமிழ்மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பபடுவது தொடர்பாக தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

இக்காலகட்டத்தில் தமிழ்மக்கள் தமக்கான உரிமையை எதுவித தடைகளுமின்றிப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படவேண்டும். ஆகையால் இம்மனு பொருத்தமானதொரு காலத்தில் தாக்கல் செய்படவிருக்கிறது.

ஐ.நா. மனிதவுரிமைக் குழுவிற்கு முன் வாதிடப்பட விருக்கும் இச்சட்ட முயற்சிக்கு தாயகத்திலும் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலுமுள்ள சட்டவாளர்களையும், மற்றும் உலகெங்கும் வாழும் முற்போக்குக் கருத்துடைய சட்டவாளர்களையும் ஆதரவு வழங்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோருகிறது.

1976ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பிரதிகளை வினியோகித்ததாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தொடரப்பட்ட ட்ரயல் அற் பார் (யூரிகளற்ற நீதிமன்றம்) வழங்கில் ஜீ.ஜீ. பொன்னம்பலம், சா.ஜே.வே. செல்வநாயகம், மு. திருச்செல்வம் ஆகியோரின் தலைமையில் அறுபத்தியாறு சட்டவாளர்கள் வாதிட்டதை ஒத்ததாகவே இம்முயற்சியும் அமையவிருக்கிறது.

இவ்விடயத்தில் ஐரோப்பிய மனிதவுரிமை நீதிமன்றம் உட்பட்ட சர்வதேச நீதிமன்றங்களால் வழங்கப்பட்டு தீர்ப்புகளை முன்னுதாரணங்களாக் கொண்டு வாதிடப்படும்.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு இவ்விடயத்தில் இணைப்பாளராகச் செயற்படும் டேவிற் மற்றாஸ் அவர்களுடன் dmatas@mts.net என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்

To join please visit: www.tgte-6un.org

More from our blog

See all posts