லண்டனில் நடைபெற்ற அனைத்துலக மகளிர் தின பேரணியில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் கலந்துகொண்டது !

அனைத்துலக மகளிர் தினத்தை பிரித்தானியாவில் பல்லின மக்களை கொண்ட Million Women Rise என்ற அமைப்பு கடந்த சனிக்கிழமை மத்திய லண்டனில் பல்லினங்களை சேர்ந்த பல்லாயிரம் பெண்கள் கலந்துகொண்ட பேரணியொன்றை  நடத்தி இருந்தது.     இப் பேரணியில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் சிறுவர் முதியோர் விவகார அமைச்சும் கலந்து கொண்டு தமிழீழ தாயகத்தில் எம் பெண்கள் அனுபவிக்கும் அவலங்களையும், தமிழ் மக்களுக்கு நீதிவேண்டியும், சிறிலங்காவுக்கு மேலும் கால அவகாசத்தை ஐ.நா.வழங்கக்கூடாது என்றும் சிறிலங்காவை அனைத்துலக நீதிமன்றில் நிறுத்தக் கோரியும், கொட்டொலிகள், துண்டுப் பிரசுரங்கள் பதாதைகள் (Banner), மூலம் அனைத்துலகுக்கு தெரியப்படுத்தியிருந்தது. அனைத்துலக ஊடகங்களும் பலவும் இச்செய்திகளை உள்வாங்கியிருந்தன.
Print Friendly