பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை மக்கள் மயமாக்கும் நடவடிக்கைகள்!

பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை மக்கள் மயமாக்கும் நடவடிக்கைகள்!!!

2009ம் ஆண்டில் முள்ளிவாய்க்காளிலே எம் ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னர் அரசியல் போராட்டத்தின் மூலம்  எம் சுதந்திர தமிழீழத்தை வென்றேடுப்பதற்காக 2010ம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டது.

தாயகம் தேசியம் தன்னாட்சிஉரிமை என்கின்ற முக்கிய குறிக்கோளுடன் இயங்கி வரும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை எம் தமிழ் மக்களும் உலக நாடுகளும் அங்கீகரிக்கும் நோக்கில் பல செயற்பாடுகள் உலகம் பூராக்கவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு அங்கமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடு வாரியான ஒருங்கிணைப்பு மற்றும் விளையாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் பிரித்தானியாவிலே  கடந்த 01.05.2023 தமிழ் பாடசாலைகள் விளையாட்டு சங்கத்தினரால் நடாத்தப்பட்ட கோடை கால விளையாட்டு விழா மற்றும் 08.05.2023 அன்று மன்னார் நலன் புரிச் சங்கத்தினரால் நடாத்தப்பட்ட விளையாட்டு விழாவிலும் கலந்து கொண்டு காவல் பணி வாகனத் தரிப்பிடப்பணி மற்றும் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறான நிகழ்வுகளில் பங்கு கொள்வதன் மூலம் பல அமைப்புங்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்கச் செய்வதோடு மக்கள் மத்தியிலும் அரசாங்கத்தின் கொள்கையினை கொண்டு செல்லலாம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களான அன்ரன் ஜேக்கப் சுஜந்தன், ஞானசேகரம் துஷ்யந்தன் மற்றும் தங்கவடிவேல் கௌரீசன், நவராத்தினராஜா டிசந்தன்
ஆகியோரின் ஒருங்கிணைப்பில் பல செயற்பாட்டாளர்கள் தங்கள் பணிகளை உணர்வு பூர்வமாக செய்திருந்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

More from our blog

See all posts