நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் குறைடன் தமிழ் சமூக அமைப்பும் இணைந்து தமிழீழ தேசியக் கொடி ஏற்றலுடன் பிரித்தானியாவில் தமிழர் மரபுத் திங்கள் 2024

தமிழரின் கலை கலாச்சார பன்பாட்டு விழுமியங்களை உலகிற்கு எடுத்துயம்பவும் இளைய தலைமுறையினரினை எமது பண்பாடுகளோடு ஒருமித்து பயணிக்க செய்யவும் அதற்கான முக்கியத்துவத்தை உணர்த்தவும் தமிழ் மக்களின் செழிமையான பண்பாட்டு பாரம்பரியங்களை எமக்கான அடையாளங்களாக முன்னிருத்தி தமிழரின் திருநாளாம் தைத் திருநாளினை தமிழர் மரபுத் திங்கள் என்ற தனித்துவத்துடன் உலகளாவிய ரீதியில் ஆண்டு தோறும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது

அந்த வகையில் பிரித்தானியாவில் சனிக்கிழமை 20.01.2024 அன்று 01, Campbell Road, Croydon, CR0 2SQ எனும் முகவரியில் தமிழ் மரபுத் திங்கள் வெகு விமரிசையாக நடைபெற்று இருந்தது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் பண்பாடு மற்றும் பாரம்பரியங்கள் அமைச்சின் கீழ் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது.

இதன் முதல் நிகழ்வாக மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிரித்தானிய கொடியினை தமிழ் பாடசாலைகள் விளையாட்டு சங்கத்தின் தலைவரும் நெல்லியடி மகாவித்தியாலயத்தின் பிரித்தானிய பழைய மாணவர் சங்கத்தின் தலைவரும், பிரித்தானிய தமிழர் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரும், குறைடன் தமிழ் சமூக அமைப்பின் உதவித் தலைவருமான திரு நடராஜா பக்கியராஜ் அவர்கள் ஏற்றி வைக்க தமிழீழ தேசியக் கொடியினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைத் தலைவரின் செயலாளரும் TGTE TV இன் நிறைவேற்றுப் பணிப்பாளருமான திரு தாமோதரம்பிள்ளை முருகதாஸ் அவர்கள் ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு கலை நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இந்நிகழ்வில் Croydon Labour party Councillor’s Hon Dr. Manju Sahul Mohamed Hameed, Hon.Steuart Colin, Hon. Sherwan Chowdhury, Hon. Ellily Ponnuthurai Croydon Labour party Secretary Mr. Rajakobal மற்றும் Harrow Councillor’s Hon. Suresh Krishna, Hon. Sasikala Suresh ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்ததுடன் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

சிறப்பு விருந்தினர்கள் உரை நிகழ்த்தும் போது தாம் இந்த தமிழ் சமூகத்தின்னுடைய நிகழ்வில் கலந்து கொள்வதில் தாங்கள் மகிழ்ச்சியடைவதாகவும் இன்றைய நாளில் கலந்து கொண்டதன் மூலம் எங்களுடைய கலைகளையும் கலாச்சாரத்துடன் கூடிய பண்பாட்டுகளையும் காணமுடிந்ததாகவும் இன்றைய நாள் தங்களுக்கு பயனுள்ளதாக அமைந்ததாகவும் தெரிவித்திருந்தனர்.

நடராஜா நர்த்தனாலயம், சிலம்பம் நர்த்தனாலயம், வல்வை கலைக்கோயில், கண்ணகி நடனாலயம், இலண்டன் நர்த்தன கலாபவனம், நிருத்யோதயா நாட்டியாலய மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சிச்சியும் பாடல்கள், உரை என 30இற்கும் மேற்பட்ட கலைநிகழ்வுகள் இடம் பெற்றிருந்தன. இதில் கலந்து கொண்ட கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இறுதியாக நன்றியுரையினை தொடர்ந்து கொடி கையேந்தலுடன் உறுதி மொழி எடுக்கப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

இந்நிகழ்வினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் TGTE TV ஊடாக நேரலையில் ஒளிபரப்பப்பட்டன. இந்த நிகழ்வை கீழ்வரும் இணையத்தினூடாக பார்வையிடலாம்.
tgte.tv

More from our blog

See all posts