ஶ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் நீதி கோரி மில்லியன் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது!

இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் புரிந்த ஸ்ரீலங்கா அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தக் கோரும் மில்லியன் (பத்து இலட்சம்) கையெழுத்துப் போராட்டம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டு அதன் இலக்கையும் தாண்டி அனைவரினதும் வேண்டுகோளிர்க்கிணங்க செப்டம்பர் வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக ஶ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழாவில் (09/08/2015) நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினரால் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இவ் நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டிருந்ததுடன் மக்களும் மிக ஆர்வத்துடன் ஸ்ரீலன்கவின் போர்குற்றத்திற்கு எதிராக தங்களது பங்களிப்பினை செய்திருந்தனர். இலங்கை தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச் சபையின் விசாரணைக்குழு அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இலங்கையை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு கோரி ஐ.நாவை நோக்கிய பத்து இலட்சம் கையெழுத்தினை பெறும் போராட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. புலம்பெயர் நாடுகளில் மக்கள் கூடுகின்ற பொது இடங்களில் கையெழுத்தினை மக்களிடத்தில் நேரடியாக பெறும் செயற்பாட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் என பலரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேரடியாகவும் இணைய மூலமாகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் இக்கையெழுத்துப் போராட்டமானது பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த மனு தமிழ், சிங்களம், ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, உட்பட 15 மொழிகளில் தொடங்கப்பட்டுள்ளது. இதேவேளை 1 மில்லியன் இலக்கை நோக்கி தொடங்கப்பட்ட கையெழுத்து போராட்டமானது தற்போது 1.3 மில்லியனை நெருங்கிக்கொண்டிருக்கிறது.
ஸ்ரீலங்காவின் போர்க்குற்றத்திற்கு  எதிரான நீதி கோறி மேற்க்கொள்ளப்படும் கையெழுத்து சேகரிக்கும் போராட்டத்தின் ஒரு கட்டமாக இன்று ஈஸ்ட் காம் ஸ்ரீ முருகன் ஆலய தேர் திருவிழாவில் கையெழுத்து சேகரிக்கப்பட்டது.

Print Friendly