2012-03-05 அனைத்துலக பெண்கள் நாளை முன்னிட்டு, பிரித்தானியாவில்

  • September 11, 2013
  • WCE

அனைத்துலக பெண்கள் நாளை முன்னிட்டு, பிரித்தானியாவில் இடம்பெறும் Million Women Rise எனும் பிரபல்யமிக்க, பெண்கள் பேரணியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து கொண்டது.

10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கெடுத்துக் கொண்ட இந்த மாபெரும் பேரணியில், ‘Raped, Abused, Widowed and Forgotten   Tamil Women in Sri Lanka Still In Tears’ என்ற வாசகங்களை தாங்கிய பதாதையுடன், தமிழீழத்தில் பெண்களின் இன்றைய நிலையினை வெளிப்படுத்தி, நா.த.அரசாங்கத்தின் பெண்கள் விவகாரங்களுக்கான அமைச்சு இதில் இணைந்து கொண்டிருந்தது

பெண்கள், சிறுவோர், முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் இதில் பங்கெடுத்திருந்தார்.

நீண்ட இந்தப் பேரணின் நிறைவில், தமிழீழத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விளக்கவுரை வழங்கப்பட்டது.

2007ம் ஆண்டு தொடங்கப்பட்ட Million Women Rise இந்தப் பேரணியானது, பெண்கள், மகளிர் அமைப்புக்கள், பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்களென பெண்கள் மட்டுமே பங்கெடுக்கும் பிரித்தானியாவின் பிரபல்யமிக்க பேரணியாக உள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=nkOYqyI0bzw

http://youtu.be/nkOYqyI0bzw

More from our blog

See all posts