2013-04-14 பிரித்தானியாவில் தமிழீழ சுதந்திர சாசன முழக்கம் !

  • September 16, 2013
  • WCE

 

தமிழீழ சுதந்திர சாசனத்தினை உருவாக்குவதன் வழியே ஈழத் தமிழர்கள் ஜனநாயக பெறுமானங்களுக்கு மதிப்பளிப்பவர்கள் என்ற உண்மையை உலகறியச் செய்யவும், அதன்மூலம் ஈழம் மலர்வதற்கான சர்வ தேசத்தின் உறுதுணை கிட்டும் வாய்ப்புக்களை கூட்டிக் கொள்ளவும் முடியும்.

அத்தோடு தமிழர் தேசம், சிங்கள தேசம் ஆகிய இரு நாடுகளும் நட்பு நாடுகளாக விளங்க ‘தமிழீழ சுதந்திர சாசனம்’ வழிவகுப்பதோடு, தென்னாசிய அரசியல் நிலைத்தன்மையை பேணிக்கொள்வதற்கும் துணைபுரியும். இவ்வாறு பிரித்தானிய தலைநகர் லண்டனில் இடம்பெற்றிருந்த தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான பொதுக்கூட்டமொன்றில் முழக்கமிடப்பட்டுள்ளது.

ஏதிர்வரும் மே18ம் நாள் உலகத் தமிழர்களால் முரசறைப்படவுள்ள தமிழீழ சுதந்திர சாசனத்தினை உருவாக்குவதற்கான பொதுக்கூடடங்கள் – சந்திப்புக்கள் புலம்பெயர் தேசங்களெங்கும் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன. இதனொரு அங்கமா

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ‘பெண்கள், சிறுவர், முதியோர்’ விவகார அமைச்சகத்தின் ஏற்பாட்டில் லண்டனில் தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான பொதுக்கூட்டமொன்று இடம்பெற்றிருந்தது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பில் பல்வேறு தமிழர் அமைப்புக்களின் கூட்டொத்திளைப்பில் சாசன உருவாக்கத்திற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்களின் தலைமையில்

இடம்பெற்றிருந்த பல நூற்றுக்கணக்கானோர் பங்கு பற்றி ஆக்கபூர்வமான கருத்துக்ககளை பரிமாறியிருந்தனர். பிரதமர் வி.உருத்திருகுமாரன் அவர்கள் இணையவழி காணொளியூடாக கருத்துக்களை வழங்கியிருந்தார். பகுதியின் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் Verindra Sharma அவர்களும் சவுத்தோல் கவுன்சிலர் மற்றும் Natoin Without State அமைப்பு பிரதிநிதி MS Doris அவர்களும் இந்நிகழ்வில் பங்கெடுத்திருந்தமை பிரதானமாக அமைந்திருந்தன.

தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கதற்கு பொதுமக்களின் கருத்துக்களை உள்வாங்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட கேள்விக் கொத்தினை வருகை தந்தோர் ஆர்வத்தோடு நிரப்பியிருந்ததோடு பலநூற்றுக்கணக்கான பிரதிநிதிகளை பெற்றுக் கொண்டு சென்றிருந்தனர்.

இந்நிகழ்வில் நா.தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்களான தணிகாசலம் தயாபரன் , உருத்திராபதி சேகர் மற்றும் உறுப்பினர்களான யோகி , மணிவண்ணன் , அப்பாத்துரை வைரவமூர்த்தி , சுரேன் ,நிமலன் , குணசீலன் ஆகியோரும் பங்கெடுத்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டிலுருந்தனர்.

தமிழீழத்திற்கான சுதந்திர சாசனத்தினை வரைந்திடுவோம் வாரீர்……

More from our blog

See all posts