சிறிலங்கா அரசினால் தமிழ்ப்பெண்கள் சிறுவர்கள் மீது ஏவி விடப்பட்டுள்ள அரச பயங்கரவாதம் :

  • March 21, 2014
  • WCE
சிறிலங்கா அரசினால் தமிழ்ப்பெண்கள் சிறுவர்கள் மீது ஏவி விடப்பட்டுள்ள  அரச பயங்கரவாதம் : பெண்கள் சிறுவர் முதியோர்  நலன் மையம் !

 imageஐக்கிய  நாடுகள் சபையின் பெண்களுக்கு எதிரான அனைத்துபாகுபாடுகள் ஒழிப்பு உடன்படிக்கைல் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து சட்டவிதிகளுக்கு முரணாக தமிழ்ப்பெண்கள் சிறுவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் தனி மனித அச்சுறுத்தல், சட்ட விரோதக் கைதுகள் மற்றும்போதிய காரணங்களின்றி, பயங்கரவாதச் சட்டங்களின் மூலம் பெண்களைக் கைது செய்துஆகிய சிறிலங்காவின் அரச பயங்கரவாத நடவடிக்கையாக அமைகின்றதென நாடுகடந்ததமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் சிறுவர் முதியோர்  நலன் மையத்தின் செயலர்ரஜனிதேவி செல்லத்துரை அவர்கள் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

woemnசமீபத்திய காலமாக தமிழர் அதிகரித்துள்ள இத்தகையவிடயங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை சிறுவர் உரிமைகள் மற்றும் நலன் பேண்அமைப்பு மற்றும்  ஐக்கிய நாடுகள் சபை பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள்அனைத்து குற்றங்கள் ஒழிப்புக் குழுஆகியனவற்றின் கவனத்துக்கு கொண்டுசெல்வதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அறிக்கையின் முழுவிபரம் :

 2009ம்ஆண்டிற்கு பின்னரான சிறிலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு போர்சொல்லொனாப் பேரழிவுகளை  ஏற்படுத்தி  நின்ற நிலையில்; தமிழீழ மக்கள்அவற்றில் இருந்து இன்னமும் மீண்டு வருவதற்கான எந்தப் பரிகாரங்களும்வழங்கப்படாத நிலையில், சிறிலங்கா இனவாத அரசு மீண்டும் மீண்டும் அந்த மக்களைதனது கொடூரக் கரம் கொண்டு நசுக்கி வருகிறது என்பதனை  நாம் இந்த உலகின்கவனத்திற்கு கொண்டு வருகிறோம் .

கடந்த  இரு  வாரங்களுக்குள்  அடுத்தடுத்து இடம்பெற்றபெண்கள் மீதான அச்சுறுத்தல்களும், கைதுகளும் , காணாமற் போகச்செய்யப்பட்டுள்ளமை என்பன  தமிழர் தாயக தமிழ்ப் பெண்களின் எதிர்காலபாதுகாப்பு  மற்றும் இருப்பு நிலை குறித்த பெரும் அச்ச நிலையை எம்முள்தோற்றுவித்திருக்கிறது.

குடும்பத்தில் கணவரையும் , மூத்த இரண்டு ஆண்பிள்ளைகளையும் பறிகொடுத்த நிலையில், மூன்றாவது மகன் அரச புனர்வாழ்வுப்பள்ளியில் இருப்பது உறுதியாக தெரிந்த நிலையில் ; அவரை மீட்கப் போராடியதாயையும், சகோதரியான சிறுமி விபூசிகாவையும் இந்த அரசு மிகவும்  திட்டமிட்ட  முறையில்,  சோடனை செய்யப்பட்ட குற்றங்களின் பேரில் பயங்கரவாத தடைச்சட்டங்களின் கீழ் கைது செய்து பூசா சிறையில் தடுத்து வைத்துள்ளமை  மற்றும்தாய் மகள் இருவரையும் தனியாக பிரித்தமை

திருகோணமலையைச்  சேர்ந்த இளம் பெண் (26 வயது )தர்மிளா பாலகுருபரன் கணவரை சரணடைய வைக்கச் செய்வதற்கான காரணத்தின் பேரில்மிகக் கொடூரமாக மனித நீதிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இவர் கைது செய்யப்படும் போது ஏழு மாதக் கர்ப்பினியாகவும் மற்றும் நான்கு வயதுடைய குழந்தை இவரின் பாதுகாப்பில் இருந்தமைகவனத்தில் கொள்ளப்படவில்லை. தற்போது  சித்திர வதைகளுக்கு  பெயர் போனநான்காம் மாடியில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படல் 

யாழில் இருந்து மட்டக் களப்பு நோக்கி பயணம் செய்தமற்றுமொரு இளம் பெண் தெய்வேந்திரம் நுகேந்தா வயது 22, இரண்டரை வயதுக்குழந்தையின் தாய் காணாமற் போகச் செய்யப்பட்டுள்ளமை  ( இதே பிராந்தியத்தில்சில மாதங்களுக்கு முன்னர் இன்னுமொரு தமிழ்ப் பெண் காணாமற் போகச் செய்யப்  பட்டிருந்தார் என்பதனை இங்கு நினைவு படுத்த விரும்புகிறோம்)

இவை யாவும் உலகளாவிய  ரீதியில்   வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ்ப் பெண்கள் மத்தியில் ; ஈழத்துப் பெண்களுக்கானபாதுகாப்புக் குறித்த மன அதிர்வுகளை ஏற்படுத்தி நிற்பதுடன்

ஐக்கிய  நாடுகள் சபையின் பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகள் ஒழிப்புஉடன்படிக்கைஇல் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து சட்ட விதிகளுக்கும்முரணானது என்பதனை நாம் இங்கே ஆணித்தரமாக  சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

குறிப்பாக பெண்கள் சிறுவர்கள் மீது கட்டவுழ்த்துவிடப்பட்டிருக்கும் தனி மனித அச்சுறுத்தல், சட்ட விரோதக் கைதுகள் மற்றும்போதிய காரணங்களின்றி, பயங்கரவாதச் சட்டங்களின் மூலம் பெண்களைக் கைது செய்துசிறையில் தள்ளும்   அரச இராணுவ பயங்கரவாத நடவடிக்கைகளை  நாம் வன்மையாககண்டிப்பதுடன் இவற்றினை, ஐக்கிய நாடுகள் சபை சிறுவர் உரிமைகள் மற்றும் நலன்பேண் அமைப்பு (UNICEF)  / ஐக்கிய நாடுகள் சபை பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் அனைத்து குற்றங்கள் ஒழிப்புக் குழு‘(CEDAW) ஆகியவற்றின் உயர்மட்டக் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருகிறோம். 

மேலும் ஜெனீவா  மனித உரிமைகள் மாநாடு நடந்துகொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் காணாமற் போன, போகச் செய்யப்பட்ட தமதுகணவன்மாரையும் , ஆண்பிள்ளைகளையும் தேடிக் கொண்டிருக்கும் தாய்மாரையும்பெண்களையும் இத்தகைய தொடர்ச்சியான நடவடிக்கைகள் மூலம் அச்சுறுத்தல்நிலையில் வைத்திருக்கவும், வாழும் சாட்சிகளை பயமுறுத்தல், சிறையிடல் மூலம்அவர்களின் ஜனநாயக செயற்பாடுகளை மழுங்கடிக்கவும் மேற்கொள்ளப்படும்நடவடிக்கைகளை நாம் உன்னிப்பாக அவதானிப்பதுடன் தமிழர் விடயத்தில் அக்கறைகொண்டுள்ள நாடுகளின் கவனத்திற்கு இவற்றினை எடுத்துச் செல்லும் பணிகளில்ஈடுபட்டுளோம்.

முடிவாக சிறிலங்கா இனவாத அரசின் இத்தகையதிட்டமிடப்பட்ட இனஒழிப்பு நடவடிக்கைகளின் அவலங்கள் முடிவிற்கு வர  வேண்டுமாயின் தமிழர் அரசியல் அபிலாஷைகளை உள்ளடக்கிய சுயநிர்ணய உரிமைகள்கொண்ட அரசியல் விடுதலை ஒன்று அமைவதற்கு மக்களினது  ஒருமித்த செயற்பாடுகள்அவசியம் என்பது இங்கே வலியுறுத்தப்படுகிறது என நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்தின் பெண்கள் சிறுவர் முதியோர் நலன் மையத்தின் செயலர் ரஜனிதேவிசெல்லத்துரை அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=kv_NHek9wZE

tamils-army-abuse-3

More from our blog

See all posts