சுவிசில் அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டும் விழிப்பூட்டல் கூட்டம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

  • September 12, 2014
  • HRC
unnamed-519

சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையினால் முன்னெடுக்கப்படும் அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டும் செயற்திட்டம் தொடர்பிலான விழிப்பூட்டல் பொதுக்கூட்டமொன்று
சுவிசில் இடம்பெறுகின்றது.

சிங்கள அரசினது தமிழன அழிப்பு தொடர்பில் சாட்சியங்கள் ஆதாரங்களை சமர்பிப்பது தொடர்பில் இடம்பெறவுள்ள இந்த பொதுக்கூட்டமானது, சூரிச் நகரில் இடம்பெறவுள்ளது.

ஒக்ரோபர் 30ம் திகதிக்கு முன்னராக சாட்சியங்களை வழங்கவேண்டுமென ஐ.நாவின் விசாரணைக்குழு அறிவித்துள்ள நிலையில், இதற்கான செயற்பாட்டினை தீவிரப்படுத்தும் நோக்கில் இக்கூட்டம ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

செப்ரெம்பர் 13ம் நாள் சனிக்கிழமை (13-09-2014) Learn Lab, Heidwiesen 27, 8051 Zurich எனும் இடத்தில் 16மணிக்கு இக்கூட்டம் இடம்பெறுகின்றது.

விழிப்பூட்டல் – இனங்காணுதல் – பதிவிடல் – ஆவணப்படுத்துதல் எனும் அடிப்படையில் இதற்கான செயல்முனைப்புகள் அமைகின்றன.

பொதுமக்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்து விழிப்புடன் உரியமுறையில் சாட்சியங்களை ஆதாரங்களை வழங்குவது தொடர்பில் இக்கூட்டத்தில் விளக்கமளிக்கப்படவுள்ளது.

தமிழினஅழிப்பில் ஈடுபட்டவர்களை பொறுப்புக் கூற வைப்பதோடு, தமிழர்களுக்கான பரிகார நீதியினை அனைத்துலக சட்ட வழிமுறைகள் ஊடாக நாம் கோருவதற்கு எட்டியுள்ள இந்த வாய்ப்பினை நாம் அனைவரும் விரைந்துணர்ந்து செயற்படவேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

unnamed (5)unnamed (6)

More from our blog

See all posts