நியூயோர்க் ஐ.நா.பொதுச்சபை முன் பொங்குதமிழ் எழுச்சியுடன் பெருந்திரளாய் அணி திரள்வோம் !

TGTE-Annual-Dinner-2014-65நியூயோர்க் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் முன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24ம் நாள் இடம்பெறவிருக்கின்ற பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வில் பெருந்திரளாய் அணி திரள்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புலம்பெயர் விவகாரங்களுக்கான அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் அறைகூவல் விடுத்துள்ளார்.

சிறிலங்கா அரசினால் எம் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராகப் தமிழீழத்தில் போர்க்குரல் எழுப்ப முடியாதிருக்கின்ற நிலையில் எமது தாயக மக்களின் பொங்குதமிழ் முழக்கமாக புலம்பெயர் தமிழ்மக்களின் குரல் ஐ. நா. முன்றலில் ஒலிக்க பெருந்திரளாக திரண்டு வாருங்கள் என தனது அறைகூவலில் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான விரிவான அறிக்கை :

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ம் திகதி நியூயார்க் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் கூட்டத்தில் ஈழத்தமிழ் இனத்தின் மீதான இனப்படுகொலையைத் தலைமை தாங்கி நடத்திய சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே இரத்தம் தோய்ந்த கைகளுடன் உரை நிகழ்த்த இருக்கின்றார்.

அக்கொடுங்கோலன் வருகைக்கு எதிர்ப்புக் காட்டுவதுடன் சிறிலங்கா அரசின் தமிழ்ழினத்தின் மீதான இனப்படுகொலையை அனைத்து உலகத்துக்கும் அம்பலப்படுத்த வேண்டும். தமிழருக்கான நீதியினைக் கோரும் வகையில் பெரும் அளவில் திரண்டு எமது எதிர்ப்பினைக் காட்டவேண்டும். இந்த நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ‘சங்கே முழங்கு’ என்பதற்கேற்ப தமிழீழ விடுதலைக்கான சங்கநாதமாக எமது குரல் அங்கு ஒலிக்க வேண்டும். வட அமெரிக்கத் தமிழ் உறவுகள் உணர்வு எழுச்சியோடு மகிந்தவுக்கு எதிர்ப்புக் காட்டுவதின் மூலம் உலகத்தின் முன்பு ஒரு போர்க் குற்றவாளியாகவும் இன அழிப்பு கொடுங்கோலனாகவும் முன் நிறுத்த முடியும்.

வட அமெரிக்கத் தமிழர்கள் மட்டுமன்றி உலகின் எல்லாப் பகுதிகளிலும் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள் அனைவருமே தமது எதிர்ப்பினைக் காட்டி இன அழிப்புக்கு நீதி கோர வேண்டும்.

தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் குறிப்பாக ராஜபக்சேயின் இன அழைப்பினை அம்பலப்படுத்தி ராஜபக்சேக்கு எதிரான வலுவான குரலினைப் பதிவு செய்ய வேண்டும். அத்துடன் ஈழத் தமிழருக்கான பரிகார நீதியினை ஐ.நா. பொதுச் சபையின் முன் உறுதியுடன் கோருவதற்காக இந்த எழுச்சி ஓன்று கூடல் அமைய இருகின்றது. அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பங்கு பற்றுவதற்கான ஒழுங்குகள் செய்யப் பட்டுள்ளன. அத்துடன் கனடாவில் இருந்தும் பெருமளவில் மக்கள் பங்குபெற ஒழுங்குகள் செய்யப் பட்டுள்ளன.

சிறிலங்கா அரசினால் எம் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படு கொலைக்கு எதிராகப் தமிழீழத்தில் போர்க் குரல் எழுப்ப முடியாது இருக்கின்ற போதிலும் எமது தாயக மக்களின் பொங்கு தமிழ் முழக்கமாக புலம்பெயர் தமிழ் மக்கள் குரல் ஐ. நா. முன்றலில் ஒலிக்க வேண்டும். பெருந்திரளாக திரண்டு வாருங்கள். எமது எதிர்ப்பினைக் காட்டி ‘நியூயோர்க் ஐ.நா.பொதுச்சபை முன் பொங்குதமிழ் எழுச்சியுடன் பெருந்திரளாய் அணிதிரள்வோம்.’ என்ற வேண்டுகோளினை அன்புரிமையோடு விடுக்கிறேன் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் புலம்பெயர் சமூக விவகாரங்களுக்கான அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

unnamed (25)

unnamed (26)

 

More from our blog

See all posts