அனைத்துலக பெண்கள் நாளில் எழுச்சி கொண்ட பிரித்தானியா மற்றும் கனடா !

  • March 13, 2019
  • WCE


அனைத்துலக பெண்கள் நாளான மார்ச் 8ம் நாளன்று அனைத்துலக பெண்கள் நாளாக உலகப்பரப்பெங்கும் கொண்டாடப்படுகின்ற வேளையில் பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் எழுச்சி பேரனி ஒன்று 09.03.2019 சனிக்கிழமை இடம்பெற்றிருந்தது. 

அந்த வகையில் தோல்விகளை கண்டு துவண்டுவிடாது வெற்றி கண்ட பல பெண்கள் இவ்வவுலகில் இருக்கத்தான் செய்கின்றார்கள். பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகளில் வாழுகின்ற பலநாட்டை சேர்ந்த பல்வேறுபட்ட மக்கள் இந்த எழுச்சி பேரனியில் கலந்து கொண்டு அந்த நாட்டில் இடம்பெற்ற வன்முறைகள், காணாமல் ஆக்கப்படுதல், வன்புணர்ச்சி மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான கோசங்களையும் பதாகைகளையும் தாங்கியவாறு பேரனிகளில் கலந்து கொண்டனர். 

அந்த வகையில் தாயகத்தில் பெண்கள் படுகின்ற சிரமங்களையும் வேதனைகளையும் இலங்கை அரசாலும் இரானுவத்தாலும் தமிழ் பெண்கள் பாலியல் ரீதியாக பல சித்திரவதைகளை எதிர்நோக்கும் நிலையை சர்வதேசத்திற்கு எடுத்துக் கூறும் விதமாக  நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் தன்னை இதில் இணைத்துக்கொண்டு இருந்தது. இப்பேரணியில் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த தமிழ் பெண்கள் மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர்கள், முதியோர்கள் விவகார அமைச்சர் மதிப்பிற்குரிய பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் சிறிலங்காவில் தமிழ்ப்பெண்கள் காணாமல் போன தமது மகள், மகன், கணவன் என உறவுகளை தேடியலையும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தங்களின் அவல நிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பொருட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இன்று வரை பார்க்க முடியாத நிலையில் காணமல் ஆக்கப்பட்டுள்ளனர். தமிழர் பகுதிகளில் இருக்கும் இராணுவத்தினர் விகிதாசார அடிப்படையில் கூடுதலாகவே உள்ளனர்  என்றும் தெரிவித்தார்

More from our blog

See all posts