இந்தியாவில் முதன்முறையாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு!

Live on: www.tgte.tv  21.05.2022, Saturday at 12.30 pm UK, 7.30 am US, 5.00 pm India.

இந்தியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளுகளை தீவிரப்படுத்தும் வகையில், தனது அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வினை தமிழ்நாட்டின் சென்னைப் பெருநகரில் நா.தமிழீழ அரசாங்கம் நடாத்துகின்றது.

கொரோனா பொதுமுடக்கத்திற்கு பின்னராக நடைபெறுகின்ற நேரடி பொதுநிகழ்வாக இது அமைவதோடு, மூன்றாவது தவணைக்காலத்தின் ஏழாவது அமர்வாக மே21ம் நாள் சனிக்கிழமை இடம்பெறுகின்றது.

அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், தமிழீழ ஆதரவாளர்கள் என பேராளர்கள் பலரும் பங்கெடுக்கும் இந்நிகழ்வில் ‘ஈழவிடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு’ ‘சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடியும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்’ ஆகிய தொனிப்பொருட்களில் கருத்தமர்வுகள் இடம்பெறுகின்றன.

மூத்த ஊடகர் திரு.அய்யநாதன், தோழர் தியாகு, தோழர் பாமரன், பேராசிரியர் ஹாஜா கனி, மூத்த ஊடகர் தோழர் தெ.சி.சு.மணி, முனைவர் பேராசிரியர் நாகநாதன், முனைவர் பேராசிரியர் மணிவண்ணன், தோழர் ச.அ.சௌரிராசன் ஆகியோர் இக்கருத்தமர்வுகளில் பங்கெடுக்கின்றனர்.

கனடா, பிரித்தானியா, ஒஸ்றேலியா ஆகிய நாடுகளில் இருந்து அந்நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களது வாழ்த்துரைகளும் இடம்பெற இருக்கின்றன.

மதிமுக பொதுச்செயலர் வைகோ அவர்கள் வாழ்த்துரை வழங்க, மலேசிய பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி அவர்கள் சிறப்புரை வழங்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தலைமையுரையினை வழங்குகின்றார்.

இந்திய நேரம் மாலை 5 மணிக்கு இடம்பெறுகின்ற இந்த நேரடி நிகழ்வினை நா.தமிழீழ அரசாங்கத்தின் www.tgte.tv வலைக்காட்சி வழியாகவும் காணலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Live on: www.tgte.tv 21.05.2022, Saturday at 12.30 pm UK, 7.30 am US, 5.00 pm India.

More from our blog

See all posts