சமகால நிலைவரம் : பிரதமர் வி.உருத்திரகுமாரன் செவ்வி

  • February 27, 2015
  • TGTE

லண்டனில் இருந்து வெளியாகும் ஒரு பேப்பருக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் வழங்கிய செவ்வியினை முழுமையாக தருகின்றோம்.
நன்றி : ஒரு பேப்பர்

TGTE-PM_Rudra Interview on remedial Justice-page-001

சிறிலங்காவின் இனவழிப்பு தொடர்பான தீரமானம் வடமகாணசபையில் கொண்டுவரப்பட்டமை ஐ.நா. மனிவுரிமைச் சபையின் அறிக்கையை தாமதித்து வெளியிடப்படுதல் ஐநா மேற்பார்வையில் உள்நாட்டு விசாரணைகளை நடாத்துவது பற்றிய சிறிலங்காவின் அறிவிப்பு போன்ற நடப்பு விடயங்கள் தொடர்பாக கருத்தறிந்து கொள்வதற்காகஇ கடந்தவார இறுதியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு. வி. உருத்திரகுமாரனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டோம். அவருடனான உரையாடலின் எழுத்துருவினை இங்கு பதிவு செய்கிறோம்.

ஒரு பேப்பர்: பெப்பிரவரி பத்தாம் திகதி வடமாகாணசபையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களால் கொண்டுவரப்பட்டு சபை உறுப்பினர்களால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட சிறிலங்காவின் இனவழிப்பு தொடர்பான தீர்மானம் பற்றிய உங்களது கருத்து என்ன?

உருத்திரகுமாரன்: மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்மானமாகத்தான் நாங்கள் அதனைப் பார்க்கின்றோம். குறிப்பாக வடமாகாண சபையின் அரசியற்துணிவை (political courage) இது காட்டுகிறது. ஏனெனில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு மத்தியில் உண்மையை உரத்த குரலில் துணிச்சலாகச் சொன்னது உண்மையில் வரவேற்கத்தக்க ஒரு விடயம். மற்றயதுஇ ஒருவகையில் இதனை ஒரு game changer ஆகவே நாம் பார்க்கிறோம். சிறிலங்கா அரசாங்கமும் சில வெளிநாடுகளும்இ நாம் இனப்படுகொலை என்று கூறுவதனையும் மற்றும் பரிகாரநீதியை வலியுறுத்தவதனையும் ஏதோ இது அலைந்துழல்வு சமூகத்தின் (diaspora) ஒரு கோரிக்கையாக அதனை தனிமைப்படுத்தி நாட்டிலிருக்கும் மக்கள் அவ்வாறு கோரவில்லை என்ற மாயையை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த மாயையை கிழித்தெறியும் வகையில் இத்தீர்மானம் அமைந்திருக்கிறது.

அதாவது தாயக மக்களால் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் உரத்த குரலில் அங்கு நடந்தது இனப்படுகொலை எனக் கூறியிருக்கிறார்கள். அங்கு முன் வைக்கப்பட்ட சட்டவாதங்கள் மிகவும் வலுவானவை. முதலமைச்சர் தனது உரையில் திரும்பத் திரும்ப ஒருவிடயத்தைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். முள்ளிவாயக்காலுக்கு முன்னரும் இனப்படுகொலை நடந்திருக்கிறது என்பதனையும் தற்போது நடைபெறுவது ஒரு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை (structural genocide) என்பதனையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். அந்த வகையில் இது ஒரு மிகவும் முக்கியமான தீர்மானமாகவே நாங்கள் கருதுகிறோம். நிச்சயமாக வெளிநாடுகள் சர்வதேச சமூகத்தில் உள்ள மற்றைய நாடுகளினது நிலைப்பாட்டை மாற்றி தமிழ் மக்கள் உண்மையாக எத்தகைய நிலையில் வாழ்ந்தார்கள்இ வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை எடுத்துரைக்கும் என நாம் நம்புகிறோம்.

ஒரு பேப்பர்: கொழும்பில் இருக்கிற iberals அதாவது தாராண்மைவாதிகளும் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் சிலரும் கூறுகின்ற கருத்துகளைப் பார்த்தால் புதியஅரசாங்கம் இனங்களுக்கிடையிலான ஒரு நல்லிணக்கத்தைக் கொண்டு வர முயற்சிக்கின்றபோது இவ்வாறான தீர்மானத்தைக் கொண்டுவந்தால் அது சிங்கள கடும்போக்காளர்கள் பலடமைவவதற்கு இது ஒரு வாய்பாக அமைந்துவிடும் எனக் கருதுவதாகத் தெரிகிறது. இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

உருத்திரகுமாரன்: இக்கேள்வியினை பல கோணங்களில் அணுகமுடியம். ஒரு பக்கம் உண்மையைக் கண்டறிவதும் இன்னொரு பக்கம் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வருவதனையும்இ இரண்டும் ஒன்றுக்கொன்று முரணான கருத்துகளாக நாங்கள் பார்க்க முடியாது. இது புதிதாக எங்களுக்கு மட்டும் சொல்லப்படுவதில்லைஇ சூடான் பிரச்சினைகளின்போதும் இந்தக் கருத்து முன்வைக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் ஐ.நா. மனிதவுரிமைச்சபையின் ஆணையாளராகவிருந்த Louise Arbour அம்மையார் மிகவும் வலுவாக இந்தக் கருத்தினை நிராகரித்திருந்தார். அதாவது உண்மையை அறிவதும் சமாதானமாக போகவேண்டும் என்பதற்கும் இடையில் தெரிவுகள் இருக்கத் தேவையில்லை. ஏனெனில் இவை ஒன்றுக்கொன்று முரணனான கருத்துகள் அல்ல. மாறாக அவை ஒன்றை ஒன்று பலமூட்டுபவை என்ற கருத்தினை அவர் தெரிவித்திருந்தார். அண்மையில் இலங்கைக்கு சென்றிருந்து பாப்பரசரும் இத்தகைய கருத்தினை அங்கு தெரிவித்திருந்தார். அதாவது உண்மையைக் கண்டறிவதன் மூலமே அங்கு சமாதானத்தை கொண்டுவரமுடியும் என அவர் கூறியிருந்தார்.

இரண்டாவது இப்போது ஒரு புதிய அரசாங்கம் வந்துள்ளது எனக் கூறப்படுவது ஒரு புதியவிடயமல்ல. காலம் காலமாக இப்படியான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். புதிய அரசாங்கம் எனக் கூறுவதற்கு முகம்தான் மாற்றப்பட்டிருக்கிறதே தவிர ராஜபக்ஷ அமைச்சரவையில் இருந்தவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். ஆகவே இது ஒரு ஆட்சி மாற்றம் என்று கூறமுடியாது. உண்மையில் என்ன நடந்ததென்றால் சிங்கள புத்திஜீவிகளும் சில சிங்களத் தலைவர்களும் இணைந்து சிறிலங்கா எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்பதைத் உணர்ந்துஇ ஸ்ரீலங்காவை தப்ப வைப்பதற்காக ராஜபக்ஷவின் மாற்றுவதற்கு கொண்டுவரப்பட்ட புத்திசாலித்தனமான திட்டம் இது. அதுதான் நடந்தேறியிருக்கிறது. அதற்கு சர்வதேச நாடுகளும் உதவி செய்திருக்கின்றன. நாங்களும் அக்கருத்தினை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. என்னைப்பொறுத்தவரையில்ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்ற கருத்தினை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

மூன்றாவதுஇ நெடுக தமிழர்கள் எல்லாத்தையும் மறைச்சுக் கொண்டு விட்டுக்கொடுக்க வேண்டும் என்றில்லை. ஒரு வகையில் பார்த்தால் பலமுள்ளவர்கள்தான் விட்டுக்கொடுப்புக்களைச் செய்து பலமற்றவர்களுக்கு உதவவேண்டும். இன்றைக்கு நாங்கள் பலமற்றவர்களாக இருக்கிறோம். அப்படியிருந்துகொண்டு பலமானவர்களான சிங்களவர்களை நோகடிக்கக்கூடாது என்பதற்காக வாயை மூடிக் கொண்டு உண்மையை பேசாதிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமாகக் கொள்ளமுடியாது. ஆட்சி மாற்றம் என்றவகையில் பொஸ்னியாவில் நடந்ததை எடுத்துப்பார்ப்போம். மிலோசவிச் தூக்கியெறியப்பட்ட பின்னர் அங்கு ஒரு ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. அதற்குப் பிறகு விசாரணை ஒன்றும் தேவையில்லையென்று இருக்கவில்லை. சர்வதேசம் விசாரணைகளை மேற்கொண்டது.

இலங்கைத்தீவில் ஒரு இனரீதியான பிரச்சனை இருக்கிறது என்பதனை இன்றைக்கு நடக்கும் சம்பவங்கள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. ஒரு உள்நாட்டு விசாரணை போதுமானது என்று சிங்கள அரசாங்கம் சொல்கிறது. சர்வதேச விசாரணை தேவை. ஐ.நா. அறிக்கை வெளியியிடுவதனை தாமதிக்க வேண்டாம் என தமிழர் தரப்பு பிரதிநிதிகள்இ மற்றும் தமிழ்மக்கள் கூறுகிறார்கள். கொழும்பிலுள்ள சிவில் சமூகம் சர்வதேச விசாரணை தேவையில்லை என்று கூறுகிறது. தமிழ்ச் சிவில் சமூகம் கூறுகிறது சர்வதேச விசாரணை தேவை என்று. நடக்கின்ற இந்த சம்பவங்கள் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. எனவே சர்வதேசம் இந்த முரண்பாட்டைக் கருத்திற்கொண்டு ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

இன்னொன்றையும் குறிப்பிடவேண்டும். இன்றைக்கு அரசாங்கங்கள் தமிழீழத்திற்கு ஆதரவு வழங்கவில்லை. தமிழருக்கு நீதி வேண்டும் என்பதற்கு ஆதரவு வழங்கினாலும் தமிழீழத்திற்கு ஆதரவினைக் கொண்டிருக்வில்லை. என்னைப்பொறுத்தவரையில் அரசாங்கங்களின் நிலைப்பாட்டினை மாற்றுவதற்காக மக்கள் சக்தியை ஒன்றுபடுத்தும் முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். இன்றைய உலகமயமாக்கலில் சிவில் சமூகங்கள் முக்கிய சக்தியாக உள்ளன. எனவே மக்கள் சக்தியை திரட்டுவதன் மூலம் இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

ஒரு பேப்பர்: சர்வதேசவிசாரணை இல்லாமல் சர்வதேச நியமங்களைப் பின்பற்றி உள்ளுர் விசாரணையை ஏற்படுத்துவதனை hybrid விசாரணை என்று குறிப்பிட்டீர்கள். ஐ.நா. மேற்பார்வையில் உள்ளக விசாரணை இடம்பெறுமானால் அதனைத் தாம் ஏற்றுக் கொள்ளத் தயராக இருப்பதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேரந்த சுமந்திரன் குறிப்பிட்டிருக்கிறார். அவ்வாறான விசாரணையை நாங்கள் ஏற்றுக் கொள்ளலாமா?

உருத்திரகுமாரன்: நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது. முதலாவதாக நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல இது ஒரு அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடுமைகள் என்றுஇ அதாவது ராஜபக்ஷ அரசாங்கத்தால் நடத்தப்பட்ட இனப்படுகொலை எனக்கூறமுடியாது. மாறாக சிறிலங்கா அரசால் (Sri Lankan state) மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை. ஆகவே சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி வழங்கும் விடயத்தில் சிறிலங்கா அரசாங்கங்கள் எந்தவொரு பாத்திரத்தையும் வகிக்க முடியாது. ஐ.நா. செயலாளர் நாயகத்தால் உருவாக்கப்பட்ட நிபுணர்குழுவின் அறிக்கையிலேயே state accountability என்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆகவே அரசு குற்றவாளியாக இருக்கும்போது விசாரணைகளை அது மேற்கொள்ள முடியாது.

இரண்டாவது தமிழர்களுக்கு நீதி வழங்கக்கூடிய அரசியல் சூழல் சிறிலங்காவில் இல்லை. ஒரு அரசியல் சூழ்நிலை காணப்படவில்லை என இந்த நிபுணர் குழுஅறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆகவே எத்தகைய உள்ளகவிசாரணையும் அங்கு நீதியைக் கொண்டுவராது.

மூன்றாவதாக போர்க்குற்றங்கள் போன்ற விடயங்கள் சிறிலங்காவின் குற்றவியல் சட்டங்களில் இல்லை. ஆகவே இங்கு இழைக்கப்பட்ட குற்றங்கள் சாதார சாட்டங்களின்படிதான் விசாரிக்கப்படும். LLRC அறிக்கையிலும் அங்கு சாதாரணமான கொலைகள் நடைபெற்றதாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. இனப்படுகொலையை சாதாரண குற்றவியல் சட்டங்களுக்கமைய விசாரிப்பது அதன் தீவிரத்தை குறைத்து முக்கியத்துவமற்தாக ஆக்குவதாகவே முடியும்.

ஆகவே இது சுமந்திரனின் தனிப்பட்ட கருத்தாகவே எடுத்துக்கொள்ள முடியும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்க கருத்தாகவோஇ தமிழ் மக்களின் கருத்தாகவோ எடுத்துக்கொள்ள முடியாது.

More from our blog

See all posts