TGTE - Homeland தாயகம்
சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கம், சமூக வலைத்தளங்களில் பரப்பரபடைந்துள்ளதோடு ஆறு இலட்சத்தினை நெருங்கி வருகின்றது.
www.tgte-icc.org எனும் இணைய மூலமாக ஆறு இலட்சம் மின்னொப்பங்களை இக்கையெழுத்து இயக்கம் எட்டியுள்ள நிலையில் நேரடியாக பெற்றப்படும் ஒப்பங்களும் பல இலட்சங்களை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் கையெழுத்துப் போராட்டம் தோல்வியென சிங்கள ஊடகமொன்று எதிர்பரப்புரை மேற்கொண்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் தமிழீழம், புலம், தமிழகம் என தமிழர்கள் பரந்து வாழ்கின்ற தேசங்களெங்கும் பல்வேறு தரப்பினரும் இக்கையெழுத்து இயக்கத்தினை முன்னெடுத்து வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.