மலேசியாவின் பினாங்கு அனைத்துலக தமிழ் மாநாட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!

  • November 9, 2014
  • TGTE
penang-10உலகப் பரங்பெங்கும் வாழும் தமிழர் சமூக அரசியல் பிரதிதிகள் பங்கெடுத்துள்ள மலேசியாவின் பினாங்கு அனைத்துலக தமிழ் மாநாட்டில், நாடுகடந்த கடந்த தமிழீழ அரசாங்கம் பங்கெடுத்துள்ளதாக அதன் செய்திக்குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அடையாளத்தைத் தேடி’ எனும் தொனிப்பொருளில் பினாங்கு தமிழர் முன்னனற்ற இயக்கத்தின் ஏற்பாட்டில் நவம்பர் 7,8,9 தேதிகளில், இந்த இடம்பெற்று வரும் இந்த மாநாட்டில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் அவர்கள் பங்கெடுத்துள்ளதாக அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழீத் தாயகத்தில் இருந்து வட மாகாண சபைப் பிரதிநிதி அனந்தி சசிதரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதி சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழகத்தில் இருந்து மதிமுக தலைவர் வைகோ தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்டிருட்டி வேல்முருகன் உட்பட, 100க்கும் மேற்பட்ட சமூக அரசியல் பிரமுகர்கள் இந்தோனேசியா, மியான்மார், மொரிஷியஸ், ரீயூனியன் தீவு, தென்னாப்பிரிக்கா, இந்தியா, தமிழீழம், அமெரிக்கா, கனடா, ஐரோப்பா மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களில் இருந்து பங்கெடுத்துள்ளனர்.

பினாங்கு துணை முதல்வர் இராமசாமி அவர்கள் முக்கிய பாங்காற்றுகின்ற இந்த மாநாட்டின் தொனிப்பொருளாகிய ‘அடையாளத் தேடலில்’ உலகத் தமிழர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து ஆய்வுக்கட்டுரைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு நிரத்தரமான அரசியல் தீர்வினை எட்டுவதற்குரிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வகிபாகம் என்ன எனும் கருப்பொருளில், நா.தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் அவர்கள் கருத்துரையினை முன்வைத்துள்ளார்.

இதேவேளை இந்த மாநாட்டின் சிறப்புரையாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது உரை காணொளி முறையில் காணிபிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from our blog

See all posts