அனைத்துலக நிபுணர் குழுவின் Monitoring Accountability Panel (MAP) முதல் மாநாடு ஐ.நா மனித உரிமைச்சபையின் கூட்டத் தொடரில் இடம்பெற்றது !

  • March 10, 2016
  • TGTE

 சிறிலங்காவை மையப்படுத்திய நீதிப்பொறியமைவுகளை கண்காணிக்கும் அனைத்துலக நிபுணர்குழுவின் Sri Lanka Monitoring Accountability Panel (MAP) முதல் மாநாடு ஐ.நா மனித உரிமைச்சபையில் இடம்பெற்றது.

இனப்படுகொலை, போர் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் என பல்வேறு மனித உரிமை மீறல்கள் விவகாரங்களில் சர்வதேச நிறுவனங்களில் பங்காற்றிய ஆறு நிபுணர்களை கொண்டதாக இக்கண்காணிப்பு குழு இயங்குகின்றது.

சிறிலங்கா தொடர்பில் கடந்தாண்டு(2016) ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானித்தினை மையமாக கொண்டு நாடுகடந்த தமிழீ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட இக்கண்காணிப்புக் குழு சுந்திரமான ஓர் செயற்பாட்டு நிறுவனமாக இயங்கி வருகின்றது.

ஐ.நா மனித உரிமைச்சபைக்கு தனது முதல் அறிக்கையினை சமர்பிhத்திருந்த இக்கண்காணிப்புக்குழு, தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வரும் 31வது ஐ.நா மனித உரிமைச்பைக் கூட்டத் தொடரில் தனது முதலாவது உப மடாநாட்டினை நடாத்தியுள்ளது.

மார்ச் 10ம் நாள் வியாழக்கிழமை இடம்பெற்றிருந்த இந்த உப மாநாட்டில் கண்காணிப்புகுழுவின் நிபுணர்களின் ஒருவரான Hon Peter HAYNES QCஅவர்கள் பங்கெடுத்திருந்தார். ஐ.ரோப்பிய ஒன்றியத்தின் முன்னாள் உறுப்பினரும், நா. தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினர்களின் ஒருவருமான Hon Robert EVANSஅவர்கள் உப மாநாட்டினை தலைமை தாங்கியிருந்தார்.

இந்த உப மாநாட்டில் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள், மனித உரிமைவாதிகள் என பலரும் பங்கெடுத்திருந்தனர்.

இந்த நிபுணர் குழுவில், சர்வதேசக் குற்றவியல் சட்டம், மனித உரிமைகள், தேசிய போர்க்குற்ற நீதிமன்றங்கள், பிராந்தியக் குற்றவியல் வழக்குகள் ஆகியவற்றில் சட்டபூர்வ நிபுணத்துவம் பெற்ற மரீ கிராட் (பிரான்ஸ்), பீட்டர் ஹெயின்ஸ் க்யூசி (பிரித்தானியா) , ரிச்சாரட் ஜே.ரோஜர்ஸ் (பிரித்தானியா), ஹெதர் றையன் (ஐக்கிய அமெரிக்கா), நீதிபதி அஜித்பிரகாஷ் ஷா (இந்தியா) இவர்கள் உள்ளனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

UN7

UN6

UN5

More from our blog

See all posts