TGTE Election Commission UK

  • October 2, 2013
  • TGTE

ஒக்ரோபர் 26ல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணை அரசவைக்கான தேர்தல் !

இலங்கையின் வட மாகாண சபைத் தேர்தலில் தமிழீழத் தாயக மக்களின் தன்னெழுர்சியின் தொடர்சியாக புலம்பெயர் தேசங்களில் இடம்பெறவுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலும் அமையவிருக்கின்றது.

எதிர்வரும் ஒக்ரோபர் 1ம் நாளுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாம் தவணை அரசவை நிறைவு காண்கின்ற நிலையில் இரண்டாம் தவணை அரசவைக்கான தேர்தல் ஒக்ரோபர் 26ம் நாள் புலம்பெயர் தேசங்களெங்கும் இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் இத்தேர்தல் தொடர்பிலான தேர்தல் ஆணையத்தின் அறிக்கையின் தொடர்சியாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை :

தேர்தல் தொடர்பிலான முக்கிய திகதிகள் அறிவிக்கப்பட்டன.

1. நா. தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கலைப்பு ஒக்டோபர் 01, 2013
2. வேட்பாளர் வேட்புமனு கோரப்படுவது ஒக்டோபர் 02, 2013
3. வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாள் ஒக்டோபர் 08, 2013
4. வேட்பாளர் பட்டியல் வெளியாகும் நாள் ஒக்டோபர் 10, 2013
5. வேட்பாளர் மனு மீளப் பெறும் இறுதி நாள் ஒக்டோபர் 12, 2013
6. நா.தமிழீழ அரசாங்கத்தின் பொதுத் தேர்தல் ஒக்டோபர் 26, 2013

1. தேர்தல் முறை

தேர்தல் முறையானது, ஓர் மக்களாட்சி முயற்சியாகத், தன்மையிலும் அளவிலும் எத்தகைய பிரதிநிதித்துவத்தைத் தாங்கியுள்ளது என்பதைப் பிரதிபலிப்பதாகும். பாராளுமன்றத் தேர்தல்களில் கையாளப்படும் முறையானது பொதுவாக எங்குள்ளவர்களை, எவர் பிரதிநிதித்துவப் படுத்துகிறார் என்பதைத் தீர்மானிப்பதாகும். ஓர் நாட்டின் எல்லைகளுக்குள்ளேயே சம்பந்தப்பட்ட நிறுவனத்தையும் தேர்தல் தொகுதியின் அளவையும் (நாடளாவியதாயிருப்பது முதல் சிறு எல்லைகளைக் கொண்டதாயும் பொறுத்துப் பலதரப்பட்ட தேர்தல் முறைகள் கையாளப்படலாம். சனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், நகரசபைத் தேர்தல், கல்விச்சபைத் தேர்தல் ஆகியவை உதாரணங்களாக அமையும்.

2. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுத் தேர்தலில்; வாக்குரிமை:

வாக்காளர், பொதுவாக, அவரவர் வதிவிடத்தின் அடிப்படையிலான குறிப்பிட்ட ஒரு தொகுதியில் தங்கள் ஒற்றை வாக்குகளைப் பதிவு செய்யும் தகமை உடையவராவர். இருப்பினும், பல அங்கத்துவத் தேர்தல் தொகுதிகளில் மேலே விவரித்திருப்பது போல் வேறுபாடுகள் காணப்படலாம்.

3. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்; பொதுத் தேர்தல்:

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் எதிர்வரும் தேர்தலில், தேர்தல் தொகுதிகள் தனி அங்கத்தவர் தொகுதியாகவோ அல்லது பல அங்கத்தவர் தொகுதியாகவோ அமையலாம். பொதுவாக, அதிக பட்ச வாக்குகளைப் பெற்றவரே வெற்றியாளராவார்.

இருப்பினும், பல அங்கத்தவர் தொகுதிகளில் வெற்றியாளர்களைத் தீர்மானிக்கும் கிரமங்கள் வேறுபடலாம். நாட்டு நிலைமைக்கேற்ப, உரிய கிரமத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அந்தந்த நாட்டின் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

4. அதிக பட்;ச வாக்குகளின் அடிப்படையிலான வாக்களிப்பு:

4.1. தனி அங்கத்துவத் தொகுதி:

பெற்றுக் கொண்ட வாக்குகள், மொத்த வாக்குகளின் எண்ணிக்கையில், என்ன விழுக்காடாக இருந்த போதிலும் அதிக வாக்குகளைப் பெற்றவரை வெற்றியாளராக அறிவிக்கும் முறை.

4.2. பல அங்கத்துவத் தொகுதி:

அங்கத்துவ எண்ணிக்கைக்குச் சமனான வாக்குகளைப் பதிவாக்கும் உரிமை தனி வாக்காளருக்கு வழங்கப் படுதல், அல்லது ஒருவருக்கு ஒரே வாக்கு என்ற முறையில் வாக்குகள் பதியப்பட்டு, தனித்தனி வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப் படுத்தி அத் தொகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

தொகுதியில் தெரிவு செய்யவிருக்கும் அங்கத்தவர்களின் எண்ணிக்கைக்கு குறைவான வாக்குகளை, வாக்காளர், பதிவாக்கியிருக்கும் நிலையில், அவ்வாக்காளரின் வாக்குகள் செல்லுபடியானதாகக் கணிக்கப்பட்டு எண்ணப்படும். ஆனால் உத்தேச அங்கத்தவர்கள் எண்ணிக்கைக்குக் கூடுதலான வாக்குகள் பதிவாகியிருந்தால் அவ்வாக்காளரின் வாக்குகள் நிராகரிக்கப்படும்.

தேர்தல் தொகுதிகள் தொடர்பான விபரங்கள் அடுத்த ஊடக அறிக்கையில் வெளியிடப்படுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமைத் தேர்தல் ஆணையாளர் சிறீதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TGTE Election Commission Calling for Nomination for the 2nd Parliment of the Transnational Government of Tamil Eelam (TGTE) from 2nd Oct 2013 to 8th Oct 2013

Please vist to   www.tgte-ec.com

2nd October 2013

To all Prospective Candidates; – Please refer to the TGTE website

                             www.tgte-ec.com.

(1)The Application for the nomination has to be downloaded and printed, Please fill the Nomination paper in Black Ink

(2) Please make sure that you have posted the nomination paper, along with the declaration form , Two referee’s letters.

(b)  Signature and Name in Block letter with address of  Three other members from  the Civil Society willing to support your candidature.

(c) Deposit Fee £1250 Non refundable in Cash, Bank Draft or Money Order, A certified Bank Cheque Favouring Transnational Development Organisation  Nat west A/C no 67705448; Sort Code 60-08-46.

(3) Use ‘Guaranteed delivery service’ to reach us before 6PM on the 8th October 2013.

(4) Postal Address to ; 80 Tyron Way Sidcup Kent DA14 6AZ

(5) Further Inquiry  contact by Phone between 11 AM -6PM on this number 02083008590.  and Office number Mobile 07887379639

E-Mail Contact rajayogeswaran@hotmail.com

Many Thanks

Dr. V.Rajayogeswaran

Election Commission UK

More from our blog

See all posts