அமெரிக்காவில் உணர்வெழுச்சியுடன் கூடுகின்றது நாடுகடந்த தமிழீழ அரசவை !

அகவை எட்டினைக் காணும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தனது அரசவையின் நேரடி அமர்வினை உணர்வெழுச்சியுடன் அமெரிக்காவில் கூட்டுகின்றது.

புலம்பெயர் தேசங்களில் இருந்து அரசவைப் பிரதிநிதிகளும், மேற்சபை உறுப்பினர்களும், இந்த அரசவை அமர்வில் நேரடியாக பங்கெடுக்க இருப்பதோடு, பல வள அறிஞர்களும் பங்கெடுக்கின்றனர்.

இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

மூன்றாவது முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை மே மாதம் 18ந் திகதியும் அதனைத் தொடர்ந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையின் ஏழாவது நேரடி அமர்வு இம்மாதம் மே 19 முதல் 21 வரையிலான நாட்களில் தாங்கள் வாழும் லொஸ் ஏஞ்சலெஸ் பெருநகரில் இடம் பெறுகிறது.

இந்த அமர்வின் முதலரங்கில் ‘சிறிலங்காவின் அரச கட்டமைப்புக்குள் தமிழர் உரிமை சாத்தியமா?’என்ற கருப்பொருளில் கருத்தாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இதனைவிட மேலும் இரு பேசுபொருள்களை அமர்வு கவனத்துக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.

பல்பரிமாண ஒழுங்காக மாறிவரும் உலக அரசியல் ஒழுங்கு ஈழத் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு சாதகமான வாய்ப்புகளைத் தருமா என்பது குறித்து நாம் உரையாடவுள்ளோம். தமிழ் மக்களை உலகஅரங்கில் ஒருவலுமையமாக உருவாக்குவது குறித்து சிந்தனையும் உரையாடலும் இவ் அமர்வில் இடம் பெறவுள்ளன.

மேலும் 19;ம் திகதி மாலை 6:30 – 8:30 வரை லொஸ் ஏஞ்செலஸ் மக்களுடன் ஒன்றுகூடல் ஒன்றும் நடைபெறும்.

இத்தகைய விடயங்களை ஆராயும் இம் அமர்வில் தங்கள் அமைப்பும் பங்குபற்றிக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது முக்கியம் வாய்ந்ததெனவும் ஆக்க பூர்வமானதெனவும் நாம் கருதுகிறோம். எமது இவ் அழைப்பைத் தாங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் எனவும் உறுதியாக நம்புகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– Opening Ceremony of the 7th Sitting of the 2nd Parliamentary Session of the TGTE.

Time: May 19, 2017 9:00 am to 1:00 pm

Venue: Holiday Inn (9901 S La Cienega Blvd, Los Angeles, CA 90045)

– Town Hall Meeting

Time: May 19, 2017 6:30 pm to 8:30 pm

Venue: Holiday Inn (9901 S La Cienega Blvd, Los Angeles, CA 90045)

 

More from our blog

See all posts