சிறிலங்கா விவகாரத்தில் ஐ.நா தோற்றுவிட்டதா ? ஆணையாளர் அலுவலகத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கேள்வி !

  • March 16, 2017
  • TGTE

இலங்கைத்தீவில் நடந்தேறிய பாரிய மனித உரிமை மீறல்களில்

பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிகாரநீதியினை வென்றைடைவதில் ஐ.நா தோற்றுவிட்டா என்ற கேள்வியினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகத்திடம் முன்வைத்துள்ளது.

ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையளர் அலுவலகத்தின் ஆசிய பிராந்திய பொறுப்பதிகாரி Thomas HUNEKE அவர்களுக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர், ஐ.நா மனித உரிமைச்சபைச் செயலர் முருகையா சுகிந்தன் அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.

இசந்திப்பின் போது, இலங்கைத்தீவில் நடந்தேறிய பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டிருந்த அறிக்கைகள் காத்திரமான பல உண்மைகளை வெளிக்கொணர்திருந்த போதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான பரிகாரநீதியினை பெற்றுக் கொடுப்பதில் தோல்வி கண்டுவிட்டதா என்ற கேள்வியினை நாடுடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் முன்வைத்துள்ளனர்.

சிறிலங்காவுக்கு மேலும் மேலும் காலநீடிப்பு கொடுப்பதானது, நடந்தேறிய விடயங்களுக்கான பொறுப்புக்கூறலில் இருந்து சிறிலங்கா அரச தரப்பு தப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்பாக அமைவதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி மறுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் போது சிறிலங்காவுக்கு ஐ.நா மனித உரிமைச்சபை மேலும் காலநீடிப்பு வழங்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் தமிழநாட்டில் உள்ள 250க்கும் மேற்பட்ட சிவில் அமைப்புக்களின் மனுவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் அளிக்கப்பட்டிருந்தது.

சிறிலங்கா விவகாரத்தில் ஐ.நா ஆணையாளர் சயீத் அல் உசேன் அவர்கள் கொண்டிருக்கின்ற உறுதியான நிலைபாட்டில் மாற்றம் இல்லை என்றும், தீர்மானங்களை தீர்மானிக்கின்ற உறுப்பு நாடுகளின் கைகளிலேயே விவகாரங்கள் தங்கி இருப்பதாகவும் Thomas HUNEKEஅவர்கள் தெரிவித்திருந்ததாக, இச்சந்திப்புத் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள நா தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நாவுக்கான செயலர் முருகையா சுகிந்தன் அவர்கள், தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சிறிலங்காவின் வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர தரப்பினர் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகத்தினை சந்தித்திருந்த நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் தரப்பினர் சந்தித்திருப்பது இங்கு குறிப்பிடதக்கது.

More from our blog

See all posts