அனைத்துலக விசாரணைக்கு ஐ.நா மனித உரிமைச் தீர்மானம் வழியமைத்துள்ளது: நா.க.த.அ.

  • March 27, 2014
  • HRC

அனைத்துலக விசாரணைக்கு ஐ.நா மனித உரிமைச் தீர்மானம் வழியமைத்துள்ளது :நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

TGTE FM manickvasagarஅனைத்துலக விசாரணைக்கு வழிதிறந்திருக்கும் ஐ.நா மனித உரிமைச்சபை தீர்மானத்தினை வரவேற்பதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இதனை தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி என்பதனை விட சிறிலங்கா சந்தித்துள்ள மற்றுமொரு இராஜதந்திரத் தோல்வியெனத் தெரிவித்துள்ளது.

அனைத்துலக அரங்கில் சிறிலங்கா தனிமைப்படுத்தப்பட்டு வருவதோடு, அனைத்துலக சட்டங்களை மீறிய சிறிலங்காவின் நடவடிக்கைகள் அம்பலப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் அவர்கள் ஜெனீவாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களது இலங்கைத்தீவுக்கான பயணமும், அது தொடர்பிலான அறிக்கையும், அனைத்துலக விசாரணைக்கான அறைகூவல் விடுத்திருந்த நிலையில், அதனை அடிநாதமாக கொண்டு முன்வைக்கப்பட்டுள்ள இத்தீர்மானம் அனைத்துலக விசாரணைக்கு வழிசமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

More from our blog

See all posts