காப்போம் தமிழை : விளக்குகிறர் அமைச்சர் கார்த்தி விக்னேஸ்வரன்

Mniniter-Karthi நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இளையோர் மற்றும் பண்பாட்டு விவகாரங்களின் அமைச்சு புலத்தில்வாழ்ந்து வரும் இளையோர்கள் மத்தியில் தமிழர் கலை- கலாச்சார- பண்பாட்டு தளத்தில், தேசியவிழுமியங்களையும் உள்ளடக்கியவாறு, ’காப்போம் தமிழை’ எனும் செயற்திட்டத்தினைமுத்தமிழினூடாக முன்னெடுக்கத் தொடங்கியுள்ளது.

இதன் தொடக்கமாக பிரித்தானிய தமிழ்ப்<பாடசாலை மாணவர்களிற்கிடையிலான நடனம், நாடகம்,பேச்சு ஆகிய திறன்களிற்கு முதன்மை கொடுத்து போட்டி நிகழ்வொன்றினைமேற்கொள்கின்றது. சினிமாவின் சாயல்களையோ, வேறு மொழிப் பிரயோகங்களையோ முற்றிலும் உள்ளடக்காது, எமது தாய் மொழியாம் தமிழ் மொழியின் தனித்துவத்தினையும், தமிழர் பண்பாட்டின்
அடையாளத்தினையும் முதன்மைகயாகக் கொண்டு பிரித்தானிய தமிழ் பாடசாலைகளைஒன்றிணைத்து நடாத்துவது இதுவே முதல் முறையாகும்!

”காப்போம் தமிழை” எனும் இப்போட்டி நிகழ்ச்சியில் பங்குபெறும் மாணவர்களின் மொழித் திறனையும்கலைத் திறனையும் அங்கீகரித்து மேம்படுத்தும் முகமாக இளையோர் மற்றும் பண்பாட்டுவிவகாரங்களின் அமைச்சு பல கௌரவப் பரிசுகளையும் பணப்பரிசுகளையும் வழங்கி இளையோர்களைஊக்குவிக்கவுள்ளது.

இப்போட்டியில் பங்குபெற விரும்பும் தமிழ்ப் பாடசாலைகள், விண்ணப்ப முடிவுத்திகதியான 15-05-2014’ற்கு முன்பாக தங்களது விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.

இதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளவும், போட்டி விதிமுறைகளை அறிந்துகொள்ளவும் tyca@tgte.orgஎனும் மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்.

TGTE youth

More from our blog

See all posts