சுறுசுறுப்படையும் சிறிலங்காவை புறக்கணிப்போம் செயல்முனைப்பு – அச்சத்தில் சிறிலங்கா !

  • April 23, 2014
  • TGTE
சுறுசுறுப்படையும் சிறிலங்காவை புறக்கணிப்போம் செயல்முனைப்பு ! அச்சத்தில் சிறிலங்கா

அனைத்துலக அரங்கில் சிறிலங்காவை தனிமைப்படுத்த வல்ல நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் Say No To Sri Lanka எனும் செயல்முனைப்பு சுறுசுறுப்படந்துள்ள நிலையில், சிங்கள அரசு அச்சங் கொள்ளத் தொடங்கியுள்ளது.

சிறிலங்காவின் பொருளாதாரத்தில் கணிசமான அளவு பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியவாறு ‘சிறிலங்காவைப் புறக்கணிப்போம் ‘ எனும் இச்செயல்முனைப்பினை, பல்வேறு துறைகளுக்கும் விரிவுபடுத்தும் முயற்சிகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது.

இத் திட்டத்தை சிறப்புறச் செயற்படுத்துவதற்காகவும், இதற்குத் தேவையான தரவுகளைச் சேகரித்து இதனை முன்னெடுத்துச் செல்வதற்கான புதுமையான அரசியல், சட்டவியல் ரீதியான தந்திரோ பாயங்களைக் கண்டறிவதற்காகவும் தமிழீழத் தேசிய துக்க நாள் நினைவேந்தல் வாரத்தின் மே17ம் நாள் சனிக்கிழமை பிரித்தானியாவில் மாநாடொன்று இடம்பெறுகின்றது.

இந்நிலையில் சிறிலங்காவில் இயங்கும் சிங்கள அரசஆதரவு ஊடகங்கள் மற்றும் சிங்கள அரசியல் தலைவர்கள் இது தொடர்பில் தங்களின் அச்சத்தினை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இவ்வாறு சிங்கள அச்சங் கொள்ளவைத்துள்ள இச்செயல்முனைப்பு தொடர்பிலான கலந்தாய்வுக் கூட்டங்கள் பரவலாக புலம்பெயர் நாடுகளில் நா.தமிழீழ அரசாங்கத்தினால் இடம்பெறத் தொடங்கியுள்ளன.

வரும் 27/04/2014 நாளன்று ஜேர்மனியில் எனும் Dieringhauser str 121, 51645 Gummersbach என்ற இடத்தில் இது தொடர்பிலான கலந்தாய்வுக் கூட்டம் மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இதேவேளை கடந்த 19/04/2014 நாளன்று பிரித்தானியாவிலும் இது தொடர்பிலான கலந்தாய்வுக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
Notice Germnay

 

More from our blog

See all posts